search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • மணிமாறன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் அவர் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யத்தை அடுத்த கொள்ளுதீவை சேர்ந்தவர் பாலு மகன் மணிமாறன் (வயது 21). மாற்றுத்திறனாளி.

    இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் மணிமாறன் மீது மோதியது.

    இதில் மணிமாறன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கீர்த்திராஜா,(வயது 27). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் மதியம் குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அப்போது சாலையில் வந்த  கார் இவர் மீது மோதியதில் கீர்த்தி ராஜா பலத்த காயமடைந்தார். 

    அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதை குறித்து  குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தில் கரை ஒட்டி வந்தவர் வையப்பமலையை சேர்ந்த காளிதாஸ் (46), என்பது தெரியவந்து.

    தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
    சேலம்:
     ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
    லோடு ஏற்றி கொண்டு  விழுப்புரம்  மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது. 

     இந்த லாரி  நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை  சேர்ந்த  நாகராஜ் என்பவர்   ஒட்டி வந்தார். அப்போ து  திடீரென லாரி டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  தாறு மாறாக ஓடியது. 

    பின்னர் சாலையில் நடுவில் உள்ள  சென்டர்  மீடியனில் மோதிய படி   நின்றது.   தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  லாரியை மீட்டனர்.  
    தேவகோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).

    இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

    கேரள மாநிலம் கொல்லம் அருகே நேற்று இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
    கொல்லம்:

    கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நேற்று இரவு அரசுக்கு சொந்தமான கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மீது சுற்றுலா பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் குறைந்தது 57 பேர் காயமடைந்தனர். 

    கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    விபத்தில் காயமடைந்த 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி 
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    லேசான காயம் அடைந்த 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.  

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற காயமடைந்தவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் கூறினார்.

    காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

    இதனிடையே  காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

    குமாரபாளையம் அருகே பலாப்பழம் ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்து விபத்தானது.
    குமாரபாளையம்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, இளையத்தடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). டெம்போ உரிமையாளர். இவர் நெய்வேலியிலிருந்து பலாப்பழங்கள் லோடு ஏற்றி வந்தார்.

    அதிகாலை 2 மணி–அளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு கல்லூரி அருகே வரும் போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பழங்கள் சேதமானது. டெம்போவை ஓட்டிவந்த செல்வம் படுகாயம் அடைந்தார். இவர் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து குமார–பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கிறார்கள்.
    பட்டதாரி வாலிபர் விபத்தில் பலியானார்.
    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிஷ்குமார் (வயது25), பட்டதாரி. இவர் நேற்று காலையில் சிம்கார்டு வாங்கி வருவதாக இருசக்கர வாகனத்தில் சென்றார். 

    அவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் பகுதியில்  சென்றபோது  நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம்ட அடைந்தார். இதில் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி  டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில்    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இச்சம்பவம் குறித்து ஹரிஷ்குமாரின் தாய் கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கேரளாவில் அதிக விபத்து நடக்கும் இடம் என சமீபத்தில் 214 பிளாக் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதற்கு தீர்வு காண நீண்ட கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2 நாள் பிராந்திய அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகத் தரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், விபத்தில்லா சாலைகளை அமைப்பதிலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்துகிறது. கேரளாவில் அதிக விபத்து நடக்கும் இடம் என சமீபத்தில் 214 பிளாக் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதற்கு தீர்வு காண நீண்ட கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களை ஒன்றிணைத்து அறிவு, சாதனைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்திய தேசிய ஆணையம் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி யை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

    இதுவரை கேரள மாநிலத்தில், 177 கி.மீ சாலை வலையமைப்பை இந்திய தேசிய ஆணையம் முடித்துள்ளது. மேலும் ரூ. 34,972 கோடி மதிப்பிலான 403 கி.மீ சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. கூடுதலாக 6 திட்டங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

    இவை தவிர, பாலக்காடு - மலப்புரம் - கோழிக்கோடு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை, 59 கி.மீ நீளமுள்ள செங்கோட்டை - கொல்லம் கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் துறவூர் முதல் அரூர் இடையே 12.34 கிமீ நீளமுள்ள உயர்மட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்கள் மாநிலத்திற்குள் இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புத் திட்டமான பாரத்மாலா பரியோஜனாவை செயல்படுத்தி வருகிறது. 34,800 கி.மீ தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களும் மேம்படுத்தி வருகிறது. அதில் 31,621 கிமீ நீளத் திட்டங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன.

    22 கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலைகள் மற்றும் அணுகல்- கட்டுப்படுத்தப்பட்ட தாழ்வாரங்களின் வளர்ச்சி பாரத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாகும். இதன் நீளம் 8,400 கி.மீ மற்றும் மூலதனச் செலவு ரூ. 3.6 லட்சம் கோடி. இதுவரை, 20,473 கி.மீ., அதாவது திட்டத்தின் மொத்த நீளத்தில் கிட்டத்தட்ட 65 சதவிகிதம், மொத்த மூலதனச் செலவு ரூ.644,678 கோடியுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சை அருகே இன்று காலை வாகனம் மோதியதில் ஒருவர் பலியானார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் புறவழிச் சாலையில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக அந்த நபர் மீது மோதி விட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். ஆனால் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
     
    இதையடுத்துபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம்  100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் பணிபுரியும்போது  விபத்து ஏற்பட்டு மூக்கம்மாள், காளியம்மாள், காளியம்மாள், மாரியம்மாள், கருப்பாயி, வடகாசி ஆகிய 6  பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். 

    அவர்கள் உடனடியாக தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

    இந்த தகவல் அறிந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜூடன் தென்காசிக்கு சென்று  மருத்துவத்துறை இணை இயக்குனர்  செல்வராஜ்  முன்னிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். 

    அவர்களின்   உடல்நலம் குறித்து இணை இயக்குனரிடம் கேட்டறிந்தார். அனைவரும் உடல்நலத்துடன் உள்ளார்கள். விரைவில் வீடு திரும்புவார்கள் எனக் கூறிய  மருத்துவர்களிடம் ராஜபாளையம் தொகு தியை சேர்ந்த இந்த பெண்க ளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு பழங்களை யும், நிதி உதவியையும் இருவரும் வழங்கினர். இதில் தி.மு.க  பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    உத்தரப்பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    லக்னோ: 

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷர் - மீரட் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர்  உத்தரகண்டில் உள்ள கேதர்நாத் சன்னிதானத்திற்கு  காரில் சென்று கொண்டிருந்தனர். 

    இந்நிலையில், இன்று காலை புலந்த்ஷரில் உள்ள குலாவதி பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேர் மீரடில் உள்ள மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்தில் பலியானோரின்  அடையாளங்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள், ஹர்திக் ( வயது 6 ), வன்ஷ் (வயது 5), ஷாலு ( வயது 21 ), ஹிமான்சூ ( வயது 25) மற்றும் பரஸ் ( வயது 22 ) ஆவர்.

    உத்தரப்பிரதேச முதல் - மந்திரி யோகி ஆதித்யநாத் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    இந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.
    பாலக்காடு:

    கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்த பைபி என்ற 72 வயது முதியவர் தனது குடும்பத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா சென்றார். 

    சுற்றுலா முடிந்த அவர் நேற்று சேர்த்தலாவிற்க்கு திரும்பிகொண்டிருந்தபோது, பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே மாலை 5 மணி அளவில் அவர் வந்த டெம்போ டிராவலர் வாகனம், சிற்றூர் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. 

    இதில் பைபி, அவருடைய மனைவி ரோஸ்லி (65), பைபியின் தம்பி மனைவி ஜெலி (51). ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். 

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×