என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
திருப்பூர் அருகே லாரி மோதி ஒருவர் பலி
சங்கப்பாளையத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குப்புச்சிபாளையம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் (வயது 45). இவர் நேற்று சங்கப்பாளையத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
செல்லும் வழியில் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரவிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






