என் மலர்
உள்ளூர் செய்திகள்

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளர்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பார்த்து ஆறுதல் கூறினார்.
படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல்
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளர்களுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் பணிபுரியும்போது விபத்து ஏற்பட்டு மூக்கம்மாள், காளியம்மாள், காளியம்மாள், மாரியம்மாள், கருப்பாயி, வடகாசி ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தகவல் அறிந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜூடன் தென்காசிக்கு சென்று மருத்துவத்துறை இணை இயக்குனர் செல்வராஜ் முன்னிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
அவர்களின் உடல்நலம் குறித்து இணை இயக்குனரிடம் கேட்டறிந்தார். அனைவரும் உடல்நலத்துடன் உள்ளார்கள். விரைவில் வீடு திரும்புவார்கள் எனக் கூறிய மருத்துவர்களிடம் ராஜபாளையம் தொகு தியை சேர்ந்த இந்த பெண்க ளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு பழங்களை யும், நிதி உதவியையும் இருவரும் வழங்கினர். இதில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






