search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி"

    குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கீர்த்திராஜா,(வயது 27). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் மதியம் குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, அப்போது சாலையில் வந்த  கார் இவர் மீது மோதியதில் கீர்த்தி ராஜா பலத்த காயமடைந்தார். 

    அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதை குறித்து  குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தில் கரை ஒட்டி வந்தவர் வையப்பமலையை சேர்ந்த காளிதாஸ் (46), என்பது தெரியவந்து.

    தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்டர் மீடியனில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.
    சேலம்:
     ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்  இருந்து நேற்றிரவு ஒரு லாரி இரும்பு
    லோடு ஏற்றி கொண்டு  விழுப்புரம்  மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு புறப்பட்டது. 

     இந்த லாரி  நள்ளிரவில் சேலம் பட்டர்பிளை மேம்பால பகுதியில் வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் வி.புதூரை  சேர்ந்த  நாகராஜ் என்பவர்   ஒட்டி வந்தார். அப்போ து  திடீரென லாரி டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்து  தாறு மாறாக ஓடியது. 

    பின்னர் சாலையில் நடுவில் உள்ள  சென்டர்  மீடியனில் மோதிய படி   நின்றது.   தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார்   சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  லாரியை மீட்டனர்.  
    சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62).  இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .

    தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். 
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நெசவு தொழிலாளி கார் மோதி இறந்தார்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே ஆர்.பெத்தாம்பட்டி பகுதியைசேர்ந்தவர் துரைசாமி(வயது 49) நெசவு தொழிலாளி. இவர் தனது மொபட்டில் பெத்தாம் பட்டியிலிருந்து ஆட்டையாம்பட்டிக்கு சென்றார்.   

    எஸ் பாலம் வளைவில் அவர் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக  எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பலியான துரைசாமிக்கு சுமதி என்ற மனைவியும், கோபி என்ற மகனும் சாந்தி என்ற மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைசாமியின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தன. இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    பலியான துரைசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    ×