search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaya"

    • 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.
    • மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்லும் என தெரிவித்துள்ளனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர்.

    அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார்.

    இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது.

    இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது. அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர்.

    6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது.

    இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.

    தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரியதர்ஷினி இயக்கும் த அயர்ன் லேடி படத்துக்காக ஜெயலலிதாவாகவே மாறி இருந்த நித்யா மேனன் தோற்றத்தை எடுத்து பகிர்ந்து இதுபோல இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ‘ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம்.



    தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.

    இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார்.

    இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்.”

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். #Thalaivi #Jaya #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

    இதில் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.



    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவி படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. #Thalaivi #KanganaRanaut

    விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic
    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

    இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். 



    விஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.

    ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.

    இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    ×