search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa Biopic"

    தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரியதர்ஷினி இயக்கும் த அயர்ன் லேடி படத்துக்காக ஜெயலலிதாவாகவே மாறி இருந்த நித்யா மேனன் தோற்றத்தை எடுத்து பகிர்ந்து இதுபோல இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ‘ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம்.



    தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.

    இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார்.

    இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்.”

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். #Thalaivi #Jaya #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவரான மஞ்சிமா மோகன், ஜெயலலிதாக வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #ManjimaMohan #JayalalithaaBiopic
    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் தற்போது உடலை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

    இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- “சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிச்ச வி‌ஷயம். ஆனால், நான் ரொம்ப வெயிட் ஆகிட்டேன்னு பலரும் சொன்னாங்க. அதனால எடையை குறைக்க முடிவு பண்ணினேன். உணவுக் கட்டுப்பாடு எனக்குக் கஷ்டமாதான் இருக்கு... அதனால, பிடித்ததை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்குவேன்.



    ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை எனக்கும் பிடிக்கணும். அப்போதான், அவங்க வாழ்க்கையை என்னால சரியா பிரதிபலிக்க முடியும். கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படம்தான், மலையாளத்துல நான் நடிச்சிருக்கிற ‘ஜம் ஜம்.’ அதுல, கங்கனா பண்ணுன கேரக்டரை நடிக்கவே கஷ்டமா இருக்கு. அப்படி இருக்கிறப்போ, பயோபிக்ல நடிக்க டைம் ஆகும். மத்தபடி, எனக்கு ஜெயலலிதா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க கேரக்டர்ல நடிக்கச் சொன்னா, நான் தயார்’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManjimaMohan #JayalalithaaBiopic

    விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.

    இதில் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.

    இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.



    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவி படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. #Thalaivi #KanganaRanaut

    விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாகவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic
    தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ‘மதராசப்பட்டினம்‘, ‘தெய்வத் திருமகள்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

    இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உள்ள முன்னணி நாயகிகளிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரணாவத் ஆகிய மூவரில் ஒருவர் ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாவார் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கணா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கங்கனா தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். 



    விஜய் இந்த படத்தை ஒரே நேரத்தில் இந்தியிலும் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த படத்திற்கு ‘ஜெயா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்தி நடிகை கங்கணா ரணாவத் இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் ஜெயலலிதா. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். பின்னர் அவர் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார். இதையே ‘ஜெயா’ திரைப்படம் பேசுகிறது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தில் நான் ஜெயலலிதாவாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் எனக்கும் முக்கியப் பங்கு இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை எப்போதுமே விரும்புவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக தயாராகி வந்தேன்.

    ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அப்படியே என் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. கதையை கேட்டபோது இது எனக்கு புரிந்தது. படத்துக்காக தமிழ் கற்று வருகிறேன்’’.

    இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். #Thalaivi #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JayalalithaaBiopic
    தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாகி வருகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர்.

    கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.



    சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சர்ச்சையான வேடம் என்பதால் இந்த வேடத்தில் நடிக்க நடிகைகள் யோசித்தனர். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JayalalithaaBiopic #GauthamMenon #RamyaKrishnan #VijiChandrasekar

    ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் சமுத்திரக்கனி கூறினார். #JayalalithaaBiopic #Samuthirakani
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. சசிகலா வேடத்தில் சாய் பல்லவியை எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்களும் வந்தன. ஆனால் இதுபற்றி ஏ.எல்.விஜய் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.



    இதற்கிடையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனி, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன்.

    ஆனால், அது எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது சர்ப்ரைஸ். படத்தின் ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலிலதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் தவிர, இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி ஈடுபட்டுள்ளார். #JayalalithaaBiopic #Samuthirakani #ALVIjay

    ஜெயயலிதாவின் வாழ்க்கையை படமாக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலிலதாவின் அரசியல் வாழ்க்கையை தொடராக உருவாக்க இருக்கிறார். #JayalalithaaBiopic #GauthamMenon
    மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.

    இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.

    ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை இயக்குனர் விஜய்யும் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக வித்யாபாலனும், சசிகலாவாக சாய்பல்லவியும் நடிக்க இருக்கிறார்கள் என்றும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடிப்பார் என்றும் செய்தி வந்துள்ளது. இவர்கள் தவிர இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.



    இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மட்டும் டிவியில் தொடராக வெளியாக இருக்கிறது. இந்த தொடரை பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்குகிறார். ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்றும் 30 பகுதிகளாக இந்த தொடர் ஒளிபரப்பப்படும் என்றும் கூறுகிறார்கள்.

    ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. நடிகர்கள் ரஞ்சித், வினீத் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. #JayalalithaaBiopic #GauthamMenon #RamyaKrishnan

    லிங்குசாமி இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை உருவாக்கப் போவதாகவும், தான் தயாரிக்கப் போவதாகவும் திவாகரன் மகன் அறிவித்துள்ளார். #JayalalithaaBiopic #Lingusamy
    அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர், நடிகைகள் வாழ்க்கை கதைகள் படமாகி வருகின்றன. அந்த வரிசையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது.

    பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஏற்கனவே ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து படத்துக்கு ‘தி அயன் லேடி’ என்ற தலைப்பையும் சூட்டினார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் தேர்வாகி உள்ளார்.

    இயக்குநர் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை படாக்குகிறார். இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்ய பரத்வாஜ் தயாரிக்கிறார். அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவது உறுதி. படத்துக்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று பெயர் வைத்துள்ளோம். இசையமைக்க இளையராஜாவிடம் பேசி வருகிறோம்” என்றார்.



    ஏ.எல்.விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார். இந்த நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்தும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போவதாகவும், லிங்குசாமி இயக்குவார் என்றும் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், “அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குனர், எனது நண்பர் லிங்குசாமியால் படமாக்கப்படும். இதில் நடராஜன், மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குனர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். #JayalalithaaBiopic #Lingusamy

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaBiopic
    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.

    இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Jayalalithaa #Deepa #deepak
    சென்னை:

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் விஜய் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதை அடுத்து தானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் அறிவிப்பு வெளியிட்டார். மூத்த இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்தார்.

    இவர்களில் விஜய்யும் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பை தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளனர். மூன்று பேர் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளனர்.

    ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவுகளான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


    ‘ஜெயலலிதா அத்தையின் வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து என்னிடமும் என் சகோதரி தீபாவிடமும் அனுமதி பெற வேண்டும். சசிகலாவிடமும் அனுமதி பெற வேண்டும். இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அத்தையின் வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா கூறியதாவது:-

    “ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். இதுவரை எந்த இயக்குனரும் என்னிடம் அனுமதி வாங்கவில்லை. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டுமானால் அவரின் வாரிசுகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    அதுபோல ஜெயலலிதாவின் வாரிசுகளான என்னிடம் அல்லது என் சகோதரன் தீபக்கிடம் அனுமதி வாங்க வேண்டும். ஜெயலலிதா பற்றி எங்களிடம் பேசவேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் உண்மையான வாழ்க்கை வரலாறு கிடைக்கும். எங்களிடம் பேசினால் மட்டுமே அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

    ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றிய வெளியில் தெரியாத தகவல்கள் வேண்டுமானால், குடும்ப உறுப்பினர்களிடம் பேசினால் மட்டுமே சாத்தியம். ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்பட மாக எடுப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டேன்.

    ஏனென்றால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் எந்தவொரு முடிவும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சியே நடந்திருக்கிறது.

    இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றிய வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த அளவுக்கு, அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவரும்? அதனால், இந்த நேரத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றிய சினிமா எடுப்பதற்கு நான் அனுமதி தரமாட்டேன்”

    இவ்வாறு தீபாகூறினார். #Jayalalithaa #Deepa #deepak
    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.

    அவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.

    அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.



    ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். #JayalalithaaBiopic #KeerthySuresh

    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக மூன்று அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படத்தில் கமல்ஹாசன், மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்குவதாக ஏற்கனவே 2 தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். இப்போது இன்னொரு தயாரிப்பாளரும் களத்தில் இறங்கி உள்ளார். முதலில் இயக்குநர் விஜய் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிப்பதாக கூறப்பட்டது.

    இவர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 வேல்டு கப் என்ற படத்தையும் தயாரிக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கை கதை படப்பிடிப்பு அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனர் பிரியதர்ஷினியும் அறிவித்தார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்றாவதாக இப்போது பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த படத்தை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கையை பாரதிராஜா இயக்கத்தில் படமாக்க ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறோம். இதற்கு தற்காலிகமாக புரட்சித்தலைவி என்று தலைப்பு வைத்துள்ளோம். அந்த தலைப்போடு அம்மா என்ற பெயரையும் சேர்க்கும்படி சிலர் கூறியுள்ளனர். இளையராஜாவிடம் இசையமைக்க பேசி உள்ளோம். ஜெயலலிதா வேடத்துக்கு ஐஸ்வர்யாராய், அனுஷ்கா ஆகியோரில் ஒருவரை பரிசீலிக்கிறோம். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு கமல்ஹாசன், மோகன்லால் ஆகியோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.

    மற்ற இரு படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், மஞ்சிமா மோகன், வித்யாபாலன், நித்யா மேனன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர். 3 படங்களிலும் ஜெயலலிதா வேடத்தில் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #JayalalithaaBiopic #KamalHaasan

    ×