என் மலர்
சினிமா

ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்ரைசாக இருக்கும் என்றும் சமுத்திரக்கனி கூறினார். #JayalalithaaBiopic #Samuthirakani
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. சசிகலா வேடத்தில் சாய் பல்லவியை எதிர்பார்க்கலாம் என்று சில தகவல்களும் வந்தன. ஆனால் இதுபற்றி ஏ.எல்.விஜய் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.

இதற்கிடையில் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த செய்தியை அவரே உறுதிப்படுத்தியும் இருக்கிறார். இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனி, ‘ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் ஏ.எல்.விஜய், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
ஆனால், அது எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது சர்ப்ரைஸ். படத்தின் ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலிலதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் ஏ.எல்.விஜய் தவிர, இயக்குநர் பாரதிராஜா மற்றும் பிரியதர்ஷினி ஈடுபட்டுள்ளார். #JayalalithaaBiopic #Samuthirakani #ALVIjay
Next Story






