என் மலர்
சினிமா

ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh
கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.
அவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.
அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.

ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். #JayalalithaaBiopic #KeerthySuresh
Next Story






