search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Savithri"

    நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷிடம், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டதற்கு, ஜெயலலிதாவாக நடிக்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த நடிகையர் திலகம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார்.

    அவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு “ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான வி‌ஷயம். எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை.

    அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை” என்று கூறினார். கேரள வெள்ளம் குறித்து ‘கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளது. முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கின்றன.



    ஆனால், மலைவாழ் மக்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ளோர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறவில்லை. அதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து உதவி செய்ய அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கேரளா செல்லவுள்ளோம். இங்கிருந்து நிவாரணப் பொருட்கள், பாத்திரங்களாகக் கூட அனுப்பி வைக்கலாம்” என்றார். #JayalalithaaBiopic #KeerthySuresh

    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மற்றொரு படத்தில் மீண்டும் சாவித்ரியா நடிக்க இருக்கிறார். #Savithri #KeerthySuresh
    நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது.

    இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அனைத்து தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படம் மூலம் கீர்த்தி சுரேசின் மார்க்கெட் உயர்ந்தது. ராஜமவுலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து இருக்கிறது.

    தற்போது இன்னொரு முறை சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கையை அவரது மகன் பாலகிருஷ்ணா திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். படத்தை இயக்க இருப்பது தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி.



    இவர் மகாநடி திரைப்படத்தில் இயக்குநர் நாகி ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கீர்த்தியின் அபார நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கிருஷ் தான் இயக்கும் என்டிஆர் வாழ்க்கை படத்துக்காக மீண்டும் ஒருமுறை கீர்த்தியை சாவித்திரியாக்க முடிவெடுத்து இருக்கிறார். #Savithri #KeerthySuresh

    சாவித்திரி படத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #KeerthySuresh
    மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் இப்போது படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கான திரைக்கதை, நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசை அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் அவர் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் திரைக்கு வந்துள்ளது.

    இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருப்பதாகவும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாகவும் பாராட்டுகள் குவிகின்றன. இதனால்தான் அவரை ஜெயலலிதா வேடத்துக்கு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல தலைவர்கள் வாழ்க்கையும் படமாகி வருகிறது. ஆந்திராவில் மறைந்த முதல்வர்கள் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருவரது வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது.

    என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் அவரது மனைவியாக நயன்தாராவும் நடிக்க உள்ளனர். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, மன்மோகன் சிங் வாழ்க்கையும் படங்களாகின்றன. இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலனை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.
    ×