வெள்ளகோவில் அருகே நூல் மில் சுற்றுச்சுவர் மீது லாரி மோதி விபத்து

திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின.
லாரி நூல் மில் சுற்றுச்சுவரில் மோதி நின்ற காட்சி.
லாரி நூல் மில் சுற்றுச்சுவரில் மோதி நின்ற காட்சி.
Published on

வெள்ளகோவில்:

காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி நேற்று ஒரு டிப்பர் லாரி கோவை - திருச்சி ரோட்டில் காங்கேயம் அருகே உள்ள கொழுஞ்சிகாட்டு வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.இதனால் சுற்றுச்சுவர் சேதமாகின.

சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின. சுற்றுச்சுவர் அருகே உள்ள வாட்ச்மேன் அறையில் பணியில் இருந்த ராம்பாரத்சமர்பஸ்வன் (வயது 38) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

லாரி ஓட்டி வந்த டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) என்பவருக்கு கால்களில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com