லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Published on

சேலம்:

சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com