நாகர்கோவிலில் லாட்ஜ் ஊழியர் லாரி மோதி பலி

டிரைவர் மீது வழக்குநாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
நாகர்கோவிலில் லாட்ஜ் ஊழியர் லாரி மோதி பலி
Published on

கன்னியாகுமரி:

நாகர்கோவில் வாத்தி யார்விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வேலைக்கு வந்த சதீஷ்குமார் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சதீஷ்குமார் மீது மோதியது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com