என் மலர்
நீங்கள் தேடியது "bus"
- சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
- தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
செங்கல்பட்டு:
விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.
இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.
சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.
இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- 2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
- கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி, காந்திநகர், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருதமலைக்கு பஸ்கள் இயங்கி வந்தன. அது மருதமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. எளிதாக பயணம் செய்து மருதமலை சென்று முருகனை தரிசித்து வந்தனர்.
ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மருதமலை பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் மருதமலைக்கு செல்வது வழக்கம்.
வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கூட காந்திபுரம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து மருதமலைக்கு எளிதாக பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் கோவையிலேயே பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு மருதமலைக்கு செல்லும் அவல நிலை தற்போது உள்ளது.
2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பொள்ளாச்சி சாலையில் இருந்து மருதமலைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மருதமலைக்கும், திருச்சி சாலை சிங்காநல்லூருக்கும், மேட்டுப்பாளையம் ரோடு துடியலூருக்கும் நேரடி பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே 8 ஏ பேருந்து போத்தனூரில் இருந்து திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் மற்றும் இருகூர் பகுதிக்கு இயங்கி வந்தது.
46-ம் நம்பர் பஸ் போத்தனூரில் இருந்து மருதமலைக்கு சென்று வந்தது. 4-ம் நம்பர் பஸ் கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்திற்கு சென்று வந்தது. இவை அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய வழித்தடங்களில் பேருந்து இல்லாத காரணத்தால் இந்த பகுதிக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பயணிகள் 2-3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
கோவை பொள்ளாச்சி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
எனவே போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மேற்படி வழித்த டங்களில் பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் சிரமம் குறைவது மட்டுமின்றி, இனிதான பயணமும் மேற்கொள்ள முடியும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- பிரதமரின் இ.பஸ் சேவை திட்டத்தில் திருச்சி மாநகரம் தேர்வு
- சுற்றுச்சூழல் மாசு குறைந்து பசுமை அதிகரிக்கும்
திருச்சி,
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத ெ பாதுப் போக்கு வரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்கள (இ.பஸ்) அதிகம் பயன்படுத்த நடிவடிக்கை எடுத்து வருகி றது. அடுத்த 10 ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் இ.பஸ்களின் பங்கு அதிகம் இருக்கும்.கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமரின் இ.பஸ் சேவா திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்துக்காக ரூ.57 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை நாடு முழுவதும் பல்வேறு நகரங்க ளில் இயக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் நகர பஸ் சேவையை விரிவு படுத்துவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான நகர்ப்புற சேவையை அளி ப்பது ஆகிய இலக்குகள் எட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்த ப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தகுதி யான 169 நகரங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 10 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரிவில் திருச்சி மாநகரம் இடம் ெபற்றுள்ளது.20 முதல் 40 லட்சம் மக்கள் தொகை பிரிவில் ேகாவையும், 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவல் ஈரோடு, சேலம், திருப்பூரும், 5 லட்சத்துக்கு குறைவாக மக்கள் தொகை பிரிவல் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படு த்தப்பட உள்ள இத்திட்ட த்தின் கீழ் பஸ் பணிம னைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு தரப்பு ஏற்படுத்தி தரும் இ.பஸ்கள் ஸ்டாண்டர்டு, மிடி, மினி என 3 பிரிவுகளில் இ.பஸ் கள் வழங்கப்பட உள்ளன.திருச்சி மாநகரத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 100 பஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.இது குறித்து போக்குவ ரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கும் போது, பிரதம ரின் இ.பஸ் சேவை திட்டத்தி ன் கீழ் திருச்சி தேர்வு யெ்ய ப்பட்டுள்ளது.திருச்சியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, இபைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்த டம் ஏற்படுத்துதல் ஆகியவை உருவாக்க வாய்ப்புண்டு.இதன் மூலம் சுற்றுசுழல் மாசுபடுவது குறைந்து, பசுமை அதிகரிக்கும் என்ற னர்.
- பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
- பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.
பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
- பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
இதனால் ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
கீழ் திருப்பதியில் ஓட்டல்கள், கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த முதியவர்கள் குழந்தைகள் உள்படபக்தர்கள் உணவு, டீ, காபி, குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர்.
பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் தவித்தனர். ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது.
இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருப்பதி ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
- நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா (41) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் நங்கவள்ளி பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி செந்தில்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார் செந்தில்ராஜா உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த எடப்பாடி அருகே இருப்பாலியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோமதிநாயகத்தின் மகள் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார்.
- சைக்கிள் லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் வையாபுரி (வயது 65). பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டதால் தனியாக வசித்து வந்தார்.
இவரது சகோதரர் கோமதிநாயகத்தின் மகள் கொண்டாநகரத்தில் வீடு கட்டி வருகிறார். அங்கு வீடு கட்டும் பணியை வையாபுரி அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வையாபுரி கொண்டாநகரத்தை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பேட்டை ரெயில்வே கேட் அருகே சென்றபோது சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் லாரியை கடக்க முயன்றபோது அவ்வழியே அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் படாமல் இருப்பதற்காக வையாபுரி சைக்கிளை இடது பக்கம் திருப்பிய போது லாரி மீது உரசியதில் வையாபுரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது அரசு பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வையாபுரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான்.
- போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் விஷ்ணு (வயது 10). குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு செல்வதற்காக குன்னத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றான். அங்கிருந்து அணை அணைப்பதி பகுதி வழியாக செல்லும் பஸ்சிற்கு பதிலாக ஆதியூர் வழியாக செல்லும் 10-ம் நம்பர் பஸ்சில் விஷ்ணு ஏறியுள்ளான்.
சிறிது தூரம் சென்றதும், பஸ் வேறு தடத்தில் செல்வதை கண்ட சிறுவன் அதிர்ச்சியடைந்து, பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் தெரிவித்துள்ளான். பலமுறை கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளான்.
இதில் விஷ்ணு பலத்த காயமடைந்து வலியால் துடித்தான். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து ள்ளனர். பின்னர் இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குன்னத்தூர் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை நிறுத்தாததால் பள்ளி மாணவன் பஸ்சில் இருந்து குதித்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 100 மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்
- ஜெர்மன் வங்கி உதவியுடன் 500 பஸ்கள் வாங்க உள்ளதாக தகவல்
பெரம்பலூர்,
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று நடந்தது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு இறந்த 62 போக்குவரத்துத்துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 21 பேருக்கு டிரைவர் பணி நியமன ஆணைகளும், 35 பேருக்கு கண்டக்டர் பணி நியமன ஆணைகளும், 6 பேருக்கு தொழில்நுட்ப பணியாளர்களுக்கான ஆணைகளையும் வழங்கினார்.
விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பெரம்பலூர் பணிமனையில் பணியாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறையினை அமைச்சர் திறந்து வைத்தார்.
கடந்த 10 ஆண்டு காலமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஆணையின்படி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு முடிவு எட்டப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த அரசுக்கு ரூ.40 கோடி கூடுதல் செலவாகும்.
ஏற்கனவே, மின்சார பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து விட்டோம். ஜெர்மன் வங்கி நிதி உதவியோடு 500 பஸ்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 100 பஸ்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் சென்னையில் பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக பிற பெருநகரங்களில் மின்சார பஸ் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கான பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருந்த நிலையினை மாற்றி முதல்-அமைச்சர் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதன் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.
- ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்
- கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.