search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
    X

    தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

    • கரூர் செல்வநகர் காலனியில் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
    • வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமிங்கி செல்வநகர்காலனி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு தமிழக அரசு சார்பில் ஒட்டுவில்லை தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதேபோல் அந்தப் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (67). என்பவருக்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் ஓட்டு விலை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. வீடு கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அர்ஜுனன் என்பவரது வீடு மிகவும் பழுதடைந்தது இருந்தது.

    இந்நிலையில் அர்ஜுனன் மற்றும் அவரது குடும்பத்தினர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை சிதலடைந்து திடீரென விழுந்துள்ளது. அர்ஜுனனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியில் வேலைக்கு சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதுகுறித்து அர்ஜுனன் புகளூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மலையப்பசாமி, வேட்டமங்கலம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர்.

    Next Story
    ×