கோவையில் டிரம்ஸ் அடித்தபடி சுருண்டு விழுந்து இறந்த இசை கலைஞர்

திடீரென செல்வன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் டிரம்ஸ் அடித்தபடி சுருண்டு விழுந்து இறந்த இசை கலைஞர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் காந்தி காலனியை சேர்ந்தவர் செல்வன் (வயது 43). டிரம்ஸ் இசை கலைஞர். இவரது மனைவி ஆனந்தி கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர்களது ஊரில் உள்ள மகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவில் டிரம்ஸ் இசைப்பதற்காக செல்வன் சென்றார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகத்தில் டிரம்ஸ் அடித்து கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென செல்வன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக செல்வத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கோவில் திருவிழாவில் டிரம்ஸ் இசை கலைஞர் மாரடைப்பில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com