என் மலர்
நீங்கள் தேடியது "Bhavani Sagar Dam"
- பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.
- பவானி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளைநிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து நேற்று மதியம் 102 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வந்த நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விட ப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 9,300 கன அடியாக நீர் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 9 ஆயிரத்து 300 கனஅடி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தொட்டபாளையம், தொப்பம்பாளையம், அய்யன் சாலை, எரங்காட்டூர், சத்தியமங்கலம், அக்ரஹாரம், பாத்திமா நகர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொற்றபடி வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதனால் பவானி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள கொடிவேரி தடுப்பணையில் 3-வது நாளாக வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 3-வது நாளாக கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
- பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.
மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பி விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது.
- பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
104.50 அடிக்கு மேல் சென்றால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு அப்படியே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.50 அடியை நேற்று இரவு கடந்தது. இதனால் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பவானிசாகர் அணை வரலாற்றில் 28-வது முறையாக 104 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் 5-வது முறையாக பவானிசாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,549 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு உபரிநீராக 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, மேவாணி, ராக்கியாபாளையம், அடசப்பாள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பவானி ஆற்றின் கரையோரங்களில் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பவானி ஆற்றல் உபரி நீர் திறக்கப்பட்டால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- நீலகிரியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது.
ஈரோடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
மேலும் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறையினர், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நீலகிரியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3024 கனஅடி தண்ணீர்வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலில் 300 கனஅடியும், பவானி ஆற்றில் 2700 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து இதே போல் இருந்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 105 அடியை எட்டும்.
- ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
- நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை காலிங்கராயன் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு அதாவது 4 மாதத்திற்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் நாளான இன்று 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1009 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கனடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி வீதம் என மொத்தம் அணையில் இருந்து 1,105 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
+2
- பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
- குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
- பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,598 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.18 அடியாக உயர்ந்து உள்ளது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
- நேற்று காலை 78.54 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.56 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 78.54 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.56 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 5,637 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 7,607 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டி உள்ளதால் பவானிசாகர் அணை பார்க்க கடல் போல் காட்சி அளிக்கிறது.
- பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.02 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையில் தற்போதைய நீர் இருப்பு 81.25 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 856 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.02 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.53 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.59 அடியாக உள்ளது.
- பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.43 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 267 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.68 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.49 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.
மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.
இன்று காலை பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.25 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கன அடியும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 250 கன அடி தண்ணீர் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உள்ளது.
- காலிங்கராயன் வாய்க்கால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் முதல் போக பாசன நிலங்களுக்கு, 16.06.2022 முதல் 13.10.2022 வரை 120 நாட்களுக்கு, தண்ணீர் திறந்த விட கோயம்புத்தூர் மண்டலம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து ஆணையிடப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






