என் மலர்

  ராமநாதபுரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா நடந்தது.
  • திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

  தொண்டி

  ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது ஆண்டு ெதாடக்க விழாவையொட்டி திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

  நம்புதாளை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தின் கொடிகம்பத்தில் கிளை செயலாளர் ஜியாவுதீன், கிழக்கு கடற்கரை சாலையின் கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் துணை தலைவர் சாகுல் ஹமீது, குத்பா பள்ளி கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் செயலாளர் கலபத்த சகுபர் சாதிக், தொண்டி செக்போஸ்ட் கொடிகம்பத்தில் தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான், வட்டாணம் சாலை கொடிகம்பத்தில் தொண்டி நகர் துணை தலைவர் பாதுஷா, கடற்கரை எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், தொண்டி அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் புகாரி ஆகியோர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

  இதில் தொகுதி அமைப்பு செயலாளர் நாசர் அலி, பொருளாளர் அப்துல் மஜீத், சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் முஜாஹிதீன், தொண்டி மேற்கு கிளை செயலாளர் ஹீசைன், மேலும் அன்சார் அலி, பாதுஷா, ஹாஜா, அஸ்கர், ஹபீப், அர்ஷத், ராவுத்தர் ஆலிம், அப்ரீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உப்பளங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • இந்த ஜிப்சம் ஆஸ்பெட்டாஸ் சீட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால் துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள உப்பளங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் ஆஸ்பெஸ்டாஸ் சீட் தயாரிப்பதற்காக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், நதிப்பாலம், வாலிநோக்கம், தேவிபட்டினம், சம்பை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்களின் நேரடி பயன்பாட்டிற்கும், 2-ம் தர உப்பு கருவாடு, தோல் பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

  உப்பு உற்பத்திக்கான சீதோஷ்ண நிலை நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாறுபடுவதால் இந்த கால கட்டத்தில் உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியை நிறுத்திக் கொண்டு, உப்பள பாத்திகளை வடிவமைத்தல், மறு சீரமைப்பு, பாத்திகளில் படிந்துள்ள ஜிப்சங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம். 2 மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணியின் போது உப்பள பாத்திகளில் வெட்டி எடுக்கப்பட்ட ஜிப்சம் தற்போது உப்பளங்களின் ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

  இந்த ஜிப்சம் ஆஸ்பெட்டாஸ் சீட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிப்பதால் துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன.

  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் முக்கியப் பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால் மக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

  இங்குள்ள ஆதி ஜெகநாதர் கோவில் ராமர் காலத்திற்கு முந்தைய காலக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசமாக விளங்குகிறது. திருமணத்தடை, குழந்தைபேறு வேண்டி இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

  பெருமை வாய்ந்த கோவில் உள்ள ஊரில் எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. மெயின் ரோடுகள் தவிர மற்ற தெருக்களில் சரியான சாலை வசதி இல்லை.

  இந்த ஊர் மக்கள் குறிப்பிட்டு சொல்லும் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சனை உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை, 4 நாட்களுக்கு ஒருமுறை, சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை என குடிநீர் வருகிறது. அதுவும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கே வரும். அதை தவற விட்டால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. வெளியில் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

  திருப்புல்லாணி ஊருக்குள் நுழையும் இடத்தில் ஊரணி உள்ளது. அதை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர பன்றிகளே பயன்படுத்துகின்றன. இங்கு சரியான படித்துறைகளும் இல்லை. திருப்புல்லாணியில் 2016-17-ல் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் புதிய மீன் மார்க்கெட் உள்ளது. ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன.

  இந்த மார்க்கெட்டிற்கு எதிரே கருவேல முட்கள் மண்டி கிடப்பதுடன் குப்பை, கழிவுகளை கொட்டுகின்றனர். திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம், குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் குறைகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மலேசியாவுக்கு வேலை தேடி வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வர வேண்டும் என மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
  • அதன்மூலம் ஊதியம் தாமதமானால் அரசுக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேசிய தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் சார்பில் மலேசியா நாட்டு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு ராமநாதபுரத்தில் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத் தலைவர் செய்யது ஜமருல் கான் தலைமையில் 'ஒரு மாலை பொழுது' என்ற நிகழ்ச்சியும், பாராட்டு விழாவும் நடந்தது.

  மலேசிய அமைச்சரை வரவேற்று பாரதி நகர் முதல் பட்டணம் காத்தான் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

  நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, தொழிலதிபர்கள், மலேசிய தமிழர்கள், தமிழ் சங்கத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அமைச்சர் டத்தோ சரவணனுக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.

  அதனைத் தொடர்ந்து அமைச்சரின் வெற்றி பயணம் குறித்த காணொலி திரையிடபட்டதோடு நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  விழாவில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி பேசும்போது,

  தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு உணவகங்களில் ஏதேனும் ஒரு வேலைக்கு அனுமதி பெற்று செல்லும் நபர்கள் அங்கு அதே உணவகத்தில் வேறு வேலை செய்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதை தடுத்து அவர்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்ய மலேசிய அரசு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

  விழாவில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பேசும்போது, மலேசியாவிற்கு வேலை தேடி வரும் தமிழக தொழிலாளர்கள் முறையான ஆவண ங்களுடன் வர வேண்டும்.

  வேலை தேடி வரும் அந்நிய தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிடம் இல்லாமல் தவிப்பதால் தற்போது முறையான தங்குமிடத்தை உறுதி செய்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

  உரிய நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மின்னனு ஊதிய முறை நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் ஊதியம் தாமதமானால் அரசுக்கு தெரியவந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

  இந்நிகழ்ச்சியில் மலேசியா மனித வள தலைமை செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீத், மலேசியா கவுன்சில் ஜெனரல் சரவணன், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஷாஜகான், ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம், மலேசியா ஒருங்கிணைப்பு குழுவினர், வெளிநாட்டு வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீவிர தூய்மை பணிகள் குறித்து விளக்க கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.
  • நகராட்சி பணியாளர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் நகராட்சி அலுவலககூட்டரங்கில் அனைத்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் தீவிரத் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் குறித்த விளக்க கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பங்கேற்று பேசியதாவது:-

  நமது சுற்றுபுறத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். தெரிந்த ஒன்றை எவ்வாறுசெயல்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும். தூய்மை பணியில் ஈடுபடும் போது நம்மை மட்டும் ஈடுபடுத்தி கொள்ளாமல் அனைவரின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

  ஒரு தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் இருக்கும் வரை எவ்வாறு பாதுகாக்கிறோமோ அதே அளவுக்கு தண்ணீர் முடிந்தவுடன் அந்த பாட்டிலை குப்பை தொட்டியில் போடும் வரை பாதுக்காக்க வேண்டும். முடிந்த அளவிற்கு ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

  உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் குவளைகளை தவிர்த்து மாற்று பொருள்கள் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

  நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் கழிவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.ஜூன் மாதம் 4-வது சனிக்கிழமை (நாளை) குப்பையை தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும்.

  குப்பையை பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் தன்னார்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலமானவர்களை முன்பே கண்டறிந்து அவர்களுக்கு இந்த செயல்பாட்டின் நோக்கம் மற்றும் அதனை மக்களுக்கு விளக்கும் முறை குறித்து முன்பே தெளிவுபடுத்த வேண்டும்.விழிப்புணர்வு மற்றும் செயலாக்க கூட்டங்கள் நடத்தப்படும் இடங்களாக பூங்காக்கள், நகர்புற விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர இடங்கள் முன்பே கண்டறிந்து நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும் தேதி மற்றும் நேரம் அந்த பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பகுதி முக்கியஸ்தர்களுக்கும் பொது அறிவிப்பின் மூலம் முன்பே தெரியப்படுத்த வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  அதனைத் தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள்மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு சென்று கவர்னர் என்.ஆர்.ரவி தரிசனம் செய்தார்.
  • மேலும் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார்.

  ராமேசுவரம்:

  தமிழக கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

  அவரை கோவில் துணை ஆணையர் அருணாசலம் வரவேற்றார். பின்னர் கவர்னர் என்.ஆர்.ரவி ராமேசுவரம் சென்றார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் தங்கினார்.

  இன்று அதிகாலை விடுதியில் இருந்து புறப்பட்ட கவர்னர் என்.ஆர்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீர் எடுத்து தெளித்துக் கொண்டு ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் குருக்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

  இதைத்தொடர்ந்து அவர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். மேலும் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார். அவர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்தார். அங்கு தரிசனம் முடித்து விட்டு காரில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

  இன்று மாலை 2 மணிக்கு கவர்னர் என்.ஆர்.ரவி மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளார்.
  • தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

  ராமநாதபுரம்

  2022-23ஆம்ஆண்டிற்கானசுதந்திரதினவிழாவை முன்னிட்டுபெண்களின்முன்னேற்றத்திற்கு சிறந்த

  சேவை புரிந்தசமூகசேவகர்மற்றும்தொண்டுநிறுவனத்திற்கானவிருதுகள்வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

  இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தமிழ்நாட்டைபிறப்பிடமாகக்கொண்டவராகவும், 18 வயதிற்குட்பட்ட பெண்ணாகவும் இருத்தல்வேண்டும்.சமூக நலன் சார்ந்தநடவடிக்கைகள், பெண்குலத்திற்குபெருமைசேர்க்கும்வகையிலானநடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்றதுறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்துமக்களுக்கு தொண்டாற்றும்வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

  மேற்காணும்வகையில் சாதனைபுரிந்தவர்களாக இருப்பின்உரியகருத்துருவுடன்மாவட்ட சமூகநலஅலுவலகம், ராமநாதபுரம் (மாவட்ட கலெக்டர் வளாகம்) இணைப்புபடிவம்பெற்றுமுழுமையாகதமிழ்மற்றும்ஆங்கிலத்தில் நிரப்பிவழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும்தகவலுக்கு 04567-230466 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

  இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உரிமம் புதுப்பிக்காத இறால் பண்ணைகள் அகற்றப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்கப்பட்டதும், புதிதாக 13 இறால்பண்ணைகள் பதிவு வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதும் அடங்கும்.

  ராமநாதபுரம்

  ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளில், 11 இறால்பண்ணைகள் கடல்சார் நீர்வாழ் உயிரின் வளர்ப்பு ஆணையத்திடமிருந்து உரிய பதிவு பெற்று இயங்கிவரும் இறால் பண்ணைகளாகும். அதில் 8 பதிவு உரிமம் காலாவதியாகி உள்ள இறால் பண்ணைகள். அவைகளின் உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்கப்பட்டதும், புதிதாக 13 இறால்பண்ணைகள் பதிவு வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதும் அடங்கும்.

  இந்த நிலையில் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய தலைவர் மற்றும் கலெக்டர், ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கு மட்டும் 7-வது மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடத்தப்பட்டுமாவட்டக்குழு உறுப்பினர்களால் ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்திட உபகுழு அமைத்து கூட்டாய்வு செய்து கூட்டறிக்கை அளித்திட ராமநாதபுரம் வருவாகோட்டாட்சியரை தலைவராக கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கடந்த 22.10.2020 அன்று நடைபெற்ற 9- வது மாவட்ட அளவிலான குழுக்கூட்டத்தில் ராமேசுவரம்பகுதியில் உள்ள அனைத்து இறால் பண்ணைகளையும் உபகுழு ஆய்வுக்கு உட்படுத்தியது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

  ராமேசுவரம்வட்ட த்தில் அனைத்துஇறால் பண்ணைகளை மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களால் ராமேசுவரம்காவல்துறை உதவியுடன் ஆய்வு செய்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக, 22.10.2020 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மாவட்ட குழு உறுப்பினர்களால் 16.9.2021 அன்று ( மாவட்ட வருவாய் அலுவலர் நீங்கலாக)மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஊராட்சி செயலர், வேளாண் இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் (மீன்வளம்) மற்றும் மீனவர் நலத்துறை ஆகியோர்களால் ஆய்வு முடிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களது கள ஆய்வின் அறிக்கையின் அடிப்படையிலும் மற்றும் அனைத்துமாவட்டகுழு உறுப்பினர்களின் அறிக்கையின் அடிப்படையயிலும் 10- வது மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு , அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் ராமேசுவரம்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றிடகடல்சார் நீர்வாழ் உயிரினவளர்ப்பு ஆணையச்சட்டம் 2005 - ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 1-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது.
  • வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த 1-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

  அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 6 மணிக்கு தர்கா வந்தடைந்தது, தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார்.

  மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

  ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

  தர்கா வளாகத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர்களை தூவி சந்தனகூடை வரவேற்றனர். முன்னதாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

  வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

  ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிப்பட்டது.
  • இத்தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம்

  ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஏராள மான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்ய செல்வார்கள்.

  அப்பொழுது, அங்கு சுற்றித்திரியும் கால் நடை களுக்கு பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்குவதால் ஏராளமான கால் நடைகள் வேகமாக வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றது.

  ராமேசுவரம் நகராட்சி ஆணை யருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சுற்றித்திரியும் கால் நடைகளை அப்புறப்படுத்தி பாம்பன் பசுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

  இத்தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
  • குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

  விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குடிநீர், மின் வசதி, தற்காலிக கழிப்பறை மற்றும் சுகாதார பணிகள் செய்யப்பட்டுள்ளன.

  சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும்.

  தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

  இைதயொட்டி மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்து வக்குழுவினர் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.

  தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

  இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா, நிர்வாக உறுப்பினர்கள் செய்யது சிராஜுத்தீன், செய்யது இபுறாஹீம், சோட்டை எஸ்.பாதுஷா, ஹாஜி ஹுஸைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுறாஹிம், அமிர் ஹம்ஸா, சித்திக் லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா, லெவ்வை கனி, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் மற்றும் ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print