என் மலர்
நீங்கள் தேடியது "Katchatheevu"
- சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.
- கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.
இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. உடனே செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என்று மிரட்டும் தொனியில் தெரிவித்தனர்.
மீனவர்கள் தங்கள் வலைகளை எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமாகினர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் படகில் இருந்த மீன்களை அபகரித்து கொண்ட இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கடலுக்கு சென்றாலும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் வெறும் கையுடனேயே திரும்புகிறோம். இரு நாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தும் வரை தீர்வு ஏற்படாது. இதேநிலை நீடித்தால் நாங்கள் மீன்பிடி தொழிலை கைவிடும் சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அலையின் சீற்றத்தால் முனியராஜ் படகு தள்ளாடியது.
இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத்தொடங்கியது. தண்ணீரை வெளியேற்ற முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து மீனவர்கள் படகில் இருந்து குதித்து அருகில் இருந்த மற்றொரு படகில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரத்தில் படகு முற்றிலும் மூழ்கியது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும். #Rameswaramfishermen
ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி விசைப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களாக புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல டோக்கன் வழங்கப்படவில்லை. அதே நேரம் நாட்டு படகு மீனவர்களுக்கு டோக்கன் தேவையில்லை என்பதால் அவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகின்றனர்.
நேற்று பாம்பனை சேர்ந்த ஸ்டீபன் தனது நாட்டுப்படகில் மில்டன், அந்தோணி, ஸ்டீபன்ராஜ் உள்பட 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.
வழக்கமாக கரையோர பகுதிகளில் மீன்பிடிக்கும் இவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் படகுடன் சிறைபிடித்து சென்றனர்.
அவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #FishermenArrested
ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
உடனே இங்கிருந்து செல்லுங்கள் என கூறிய இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது கடல் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் வேர்க்கோட்டைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் படகில் வந்த ராமு (வயது45), காட்டு ராஜா (50), தங்கவேல் (42), முருகன் (30) ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஏற்கனவே தூத்துக்குடியை சேர்ந்த 8 பேரும், ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் என 16 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RameswaramFishermen
ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 15 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர்.
மேலும் ரோந்து கப்பல்கள் மூலம் மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் படகு சேதம் அடைந்தது.
இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எங்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
கடும் டீசல் விலை உயர்ந்திருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் கடன் வாங்கி கடலுக்கு செல்கிறோம். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். #Rameswaramfishermen
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்கத் தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது. கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பா.ஜ.க.வினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி.மு.க.வினர் இன்றைக்கு வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை.
1980-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். பா.ஜ.க. ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலைப் புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றிக் கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி.மு.க.வினர் என்பதை உலகறியும்.
நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களின் தூண்டுதலாலும், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பா.ஜ.க. புகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Karunanidhi #MKStalin #DMK #Katchatheevu
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை அவர்களை சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டியடிப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க இலங்கை அரசு கடும் சட்டங்களை இயற்றி உள்ளது. இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக மீனவர்கள் உயிர் பயத்துடனேயே தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அதிக அளவில் ரோந்து பணியில் இருந்தனர். இதனால் மீனவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.
ஆனாலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தனர். இதனால் சிறை பிடிக்கப்படுவோமோ என்று அஞ்சிய ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிப்பதை கைவிட்டு விட்டு ஏமாற்றத்துடன் பாதியிலேயே கரை திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது டீசல் விலை உயர்ந்த நிலையிலும் கடன் வாங்கி கொண்டு மீன்பிடிக்க செல்கிறோம். ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போது டீசலுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது.
ஆனாலும் மீன் பிடிக்கவிடாமல் இலங்கை கடற் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். தமிழக மீனவர்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கவே இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுகிறது.
இந்த முறை கடலுக்கு செல்லும்போது சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை குவிக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.
அச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.
“வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.
ராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy