என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கச்சத்தீவை தாரைவார்த்தது தி.மு.க.- எடப்பாடி பழனிசாமி
- மீனவர்கள் வாக்கை பெறுவதற்காக தந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.
- மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இ.பி.எஸ். சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் திரண்டு இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் எடப்படி பழனிசாமி பேசியதாவது:-
கச்சத்தீவை தாரை வார்த்தபோது மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தது.
ஆனால், தற்போது கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் கூறி வருகிறது.
16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் திமுகவினரின் கண்ணுக்கு தெரியவில்லை.
திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு மீனவர்களை காப்பாற்றியிருக்கலாமே?
மீனவர்கள் வாக்கை பெறுவதற்காக தந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.
மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






