அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை பார்த்து ஆவேசமாக கத்திய செங்கோட்டையன்.. சட்டசபையில் பரபரப்பு!

இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை பார்த்து ஆவேசமாக கத்திய செங்கோட்டையன்.. சட்டசபையில் பரபரப்பு!
Published on

தமிழக சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கட்சி எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசினார். இதற்கிடையில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும்விதமாக எழுந்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி - செங்கோட்டையன் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் சூழலில் செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com