அமைச்சர் பொன்முடியின் பேச்சு அருவருக்கத்தக்கது- காளியம்மாள்

கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை. தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு அருவருக்கத்தக்கது- காளியம்மாள்
Published on

நெல்லை:

தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ் மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

இதில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, தமிழர் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கச்சத்தீவை மீட்பது தொடர்பான எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எந்த அரசியல் கட்சியும், அரசும் எடுக்கவில்லை. தேர்தல் நேர வியூகமாகவே கச்சத்தீவு பயன்படுத்தப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர இந்திய-இலங்கை அரசுகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழகத்திற்கு தரவேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் கணிக்க முடியாத ஒன்று. எப்போது யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது யாரிடமிருந்து வெளியே வருவார்கள் என்பதை அறிய தேர்தல் வரை காத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். இப்போது கூட்டணி என சொல்லலாம். பிறகு மறுக்கலாம். எனது அடுத்த கட்ட முடிவை விரைவில் அறிவிக்கப்படும். மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்து எனது முடிவு இருக்கும்.

அமைச்சர் பொன்முடியின் பேச்சு தெரியாமல் நடந்த சம்பவம் போன்று இல்லை. அமைச்சரின் பேச்சு அருவருக்கத்தக்கதாக உள்ளது. பெண்கள் மீது அருவருக்கத்தக்க சிந்தனை கொண்ட அமைச்சரை போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com