என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரசைவாக்கம்"

    • கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அறிவிப்பு.
    • விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி அக்கோயிலை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (6-6-2025) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டம், புரசைவாக்கம் கட்டம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுலார் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாயின் ஒரு பகுதியாக வருகிற 00.06.25 / வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது என்பதால், இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 (நாளை) இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

    இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.08.2025 (சனிக்கிழமை கீழ்காணும் பள்ளிகள் இயங்கும் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டைத்தை ஒட்டி நாளை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
    • சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.

    பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.

    எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.

    ×