என் மலர்
நீங்கள் தேடியது "எழும்பூர்"
- உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
- குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.
4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்
5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்
7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்
- தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சி முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்ததோடு, அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13-ந் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களிலும், சமூக நலக்கூடங்களிலும் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மீண்டும் பழைய நிலையில் மாநகராட்சியிலேயே பணி வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
- 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே அறிவிப்பு .
நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரெயில் இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு தினசரி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் நெல்லையில் இருந்தும் சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மலை 6.45க்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
இந்நிலையில், இந்த ரெயில் இன்று 2.45 மணி நேரம் தாமதாக புறப்படும் என்று தென்னிந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆகவே இன்று எழும்பூர் சிறப்பு ரெயில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று இரவு பயணம் மேற்கொள்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
- மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
- சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
சென்னை:
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.
காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.
அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.
பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.
எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.
- எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
- எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது.
- பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், காச்சி குடாவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது.
ரெயில் காட்வாலா, ராஜோலி ரெயில் நிலையங்களை கடந்து நேற்று இரவு கடவாலா ரெயில் நிலையத்திற்கு வந்தது நின்றது. பயணிகள் ரெயிலில் இருந்து ஏறி, இறங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது பி-4 பயணிகள் பெட்டியின் அடியிலிருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட பயணிகள் உயிர் பயத்தில் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் ரெயில் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் ரெயில் பெட்டியை ஊழியர்கள் சரி செய்த பிறகு காலதாமதமாக ரெயில் மீண்டும் சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
- அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
- அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.
இந்த திட்டங்கள் எல்லாமே எழும்பூர் தொகுதி மக்களிடம் முழுமையாக சென்றடைந்துவிட்டதா என்பதை அறியவும் மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கும் பணியில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குழுவினர் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்த களப்பணி குழுவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடு வழங்குகிறார்கள்.
அதோடு, திராவிட மாடல் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்கிறார்கள்.

அதோடு, சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா அல்லது சேர விரும்புகிறார்களா? என்றும் மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம் இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கபடுகிறது.
இந்த வகையில், திராவிட மாடல் அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் எழும்பூர் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு, வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
இதன் மூலம் அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதாக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்தார்.






