என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சுதந்திர தினம்... இன்று இரவு எழும்பூர் - திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் அறிவிப்பு
    X

    சுதந்திர தினம்... இன்று இரவு எழும்பூர் - திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் அறிவிப்பு

    • தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
    • 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே அறிவிப்பு .

    நாளை (வெள்ளிக்கிழமை) சுதநதிர தினம் என்பதால் தொடர் விடுமுறையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சிறப்பு ரெயில் இன்று இரவு 11.10க்கு புறப்பட்டு நாளை காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×