என் மலர்
நீங்கள் தேடியது "மோன்தா புயல்"
- ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
- துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மோன்தா புயலின் பாதிப்பால், ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
இந்தப் புயலால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, மோன்தா புயலால் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு ரூ. 2,079 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.829 கோடியும், மீனவளத் துறைக்கு ரூ.1,270 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் இன்னும் நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால், சேதத்தின் முழுமையான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
எனினும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
- புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வான்வழியாக ஆய்வு செய்தார்.
- சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.
வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் நேற்று இரவு மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவில் மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக ஆய்வு செய்தார்.
இதனையடுத்து கொனசீமா மாவட்டத்தில் மோன்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.
பின்னர், நீரில் மூழ்கிய பயிர் வயல்களை ஆய்வு செய்த அவர், பயிர் சேதம் விரைவில் மதிப்பிடப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
- நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 18-ந் தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, நாகூர், பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம், விழுந்தமாவடி, ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள், 3,000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று மோந்தா புயல் கரையை கடந்ததை அடுத்து நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.
இதனால் கடல் சீற்றம் குறைந்தது. எனவே கடந்த 11 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் சென்றுள்ளனர்.
- வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது.
- பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது.
வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவில் புயல் கரையை கடந்தது.
இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோனசீமா பகுதியில் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த பெண் பயணித்த ஆட்டோ மீது கனமழையால் மரம் முறிந்து விழுந்தது. இதில் அப்பெண் உயிரிழந்தார். மேலும் ஆட்டோ ஓட்டுனரும் 1 சிறுவனும் படுகாயமடைந்தனர்.
அல்லூரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்புப்படையினர் மீட்டனர். ஸ்ரீகாகுளத்தில் சிவன் சிலை வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையில் இருந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. இதற்கிடையே இன்று ஆந்திராவில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- புயலின் மையக்கரு 7.30 மணியளவில் மசூலிபட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கு 20 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.
- தற்போதைய நிலையில் புயல் கரையை கடக்க தொடங்கியது.
வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று 7.30 மணியளவில் மோன்தா புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. தற்போது புயலின் மையம் (கரு) மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது. முழுமையாக கரையை கடக்க 3-4 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடந்த பின், சூறாவளியாக மாறி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுவிழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்மேற்கே 150 கி.மீ. தொலைவில் புயல் உள்ளது.
- விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்மேற்கே 250 கி.மீ. தொலைவில் உள்ளது.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம்- காக்காநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மோன்தா புயல் மசூலிபட்டடினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்மேற்கே 150 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்மேற்கே 250 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்மேற்கே 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மசூலிபட்டடினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- தற்போது காற்று சற்று அதிகமாக வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதிகயில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலும் சீற்றமாக காணப்படுகின்றன.
மோன்தா புயல் காணரமாக நேற்றில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது காற்ற சற்று வேகமாக வீசி வருகிறது.
சென்னை மெரினா அருகில் உள்ள பட்டினபாக்கம் கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால், அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோன்தா புயல் தற்போது ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
- மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் ஓடியதால் போக்குவரத்து சீராக இருந்தது.
- காற்று இல்லாமல் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுவதும் குறைந்தது.
சென்னை:
பருவமழை தீவிரம் அடைந்து வருவதையொட்டி சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் வானம் இருண்டு மழை பெய்ய தொடங்கி இன்று வரை மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் ஆந்திராவிற்கு திசை மாறி சென்றதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இன்று காலையில் இருந்து சிறு சிறு தூறலாக மழை பெய்து வருவதால் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்து டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்ப் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது.
பட்டாளம் தட்டான்குளம், கே.எம்.கார்டன் பகுதியில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
சென்னையில் சராசரியாக 3 செ.மீ. மழை பெய்து உள்ளதால் மழை நீர் உடனடியாக வெளியேறியது. வழக்கமாக தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் கூட 2 நாட்கள் மழையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் ஓடியதால் போக்குவரத்து சீராக இருந்தது.
காற்று இல்லாமல் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுவதும் குறைந்தது. மின்சார தடையும் ஏற்படாமல் சீரான வினியோகம் இருந்தது. எப்போதும் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் கூட இந்த மழையால் பாதிப்பு இல்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மழையிலும் தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. எண்ணூரில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. கத்திவாக்கம் 10 செ.மீ, திருவொற்றியூர் விம்கோ நகர் 90 செ.மீ., மாதவரம், மணலி புதுநகர், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.
அதே போல பொன்னேரி அம்பத்தூர், மணலி, பேசின் பாலம், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் கூறும் போது, சென்னையில் சராசரியாக 3 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. அதனால் மழை நீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை. கனமழை பெய்யாததால் மழை நீர் உடனே வடிந்து விட்டது. மழையால் பாதிப்பு எதுவும் இல்லை" என்றார்.
- நீர் திறப்பு 250 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரிப்பு.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள மோன்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று காலை 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இன்று மதியம் அதன் அளவு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
- மசூலிபட்டினம்- காக்கிநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கிறது மோன்தா புயல்.
- காக்கிநாடாவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை அல்லது இரவு மசூலிபட்டினம்- காக்கிநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரையை கடக்கும்போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலைத் தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதேவேளையில் கடற்கடையோரம் உள்ள வீடுகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளன. நேரம் செல்ல செல்ல கடலை அலை ஆர்ப்பரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களை வெளியேற்றி வருகின்றனர்.
- ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 320 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
- மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மோன்தா தீவிரப்புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 160 கிலோ மீட்டரும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 320 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ள புயலானது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த மோன்தா தீவிரப்புயல் தற்போது சற்றே குறைந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.
இதனிடையே மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
- எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதியில் கனமழை பதிவாகியுள்ளது.
- தென் சென்னையில் 30-50 மி.மீ. பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26-ந்தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, "மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.
மோன்தா புயலால் சென்னையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோன்தா புயலால் வட சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும், தென் சென்னையில் தூறல் மழை அடுத்த 2 மணி நேரம் வரை தொடரும். பின்னர் மழை படிப்படியாக குறைந்து நிற்கும்.
வட சென்னையில் 60-70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதியில் கனமழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 30-50 மி.மீ. பதிவாகியுள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாது" என்று தெரிவித்துள்ளார்.






