என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மோன்தா புயல்: சீற்றத்துடன் காணப்படும் சென்னை பட்டினபாக்கம் கடற்கரை
- மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- தற்போது காற்று சற்று அதிகமாக வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திர மாநிலம் கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதிகயில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலும் சீற்றமாக காணப்படுகின்றன.
மோன்தா புயல் காணரமாக நேற்றில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது காற்ற சற்று வேகமாக வீசி வருகிறது.
சென்னை மெரினா அருகில் உள்ள பட்டினபாக்கம் கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால், அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோன்தா புயல் தற்போது ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.






