என் மலர்
இந்தியா

மோன்தா புயல்: காக்கிநாடாவில் கடல் சீற்றம்- கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்
- மசூலிபட்டினம்- காக்கிநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கிறது மோன்தா புயல்.
- காக்கிநாடாவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை அல்லது இரவு மசூலிபட்டினம்- காக்கிநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரையை கடக்கும்போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலைத் தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதேவேளையில் கடற்கடையோரம் உள்ள வீடுகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளன. நேரம் செல்ல செல்ல கடலை அலை ஆர்ப்பரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களை வெளியேற்றி வருகின்றனர்.
Next Story






