என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனமழை - மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களிலும் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.






