முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல்

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி  வழங்க ஒப்புதல்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com