search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthigai"

    • ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.
    • எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

    ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

    ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.

    எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

    மனதில் தைரியத்தை ஏற்படுத்துவது சந்திரகிரகம்தான்.

    ரோமரிஷியை கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறார்களே....

    அந்த அளவுக்கு மனதில் தெளிவும், தைரியமும் உண்டாகும்.

    முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ரோமரிஷியை மனமுருக வேண்டினால் தெளிவான முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

    எனவே கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ரோமரிஷியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

    • கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம்.
    • அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

    ரோமரிஷி எங்கு ஜீவசமாதி ஆனார் என்பதில் தெளிவான விளக்கங்கள் இல்லை.

    3 கோடி பிரம்மாவின் வாழ்வுக்குப் பிறகே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும் என்று சில நூல்களில் குறிப்பு உள்ளது.

    ஆனால் அது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் உறுதிபடுத்த முடியவில்லை.

    இதனால் அவர் தியானம் செய்த இடங்கள் அருள் அலையை தரும் இடங்களாக இருக்கின்றன.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம்.

    அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

    ரோமரிஷியை வழிபடும்போது வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.

    • ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    • நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.

    இதே போன்று தமிழகத்தின் சில சிவாலயங்களில் ரோமரிஷி சித்தரின் தியான பீடங்கள் இருக்கின்றன. அந்த சிவாலயங்களில் தியானம் செய்த காலங்களில் அவரது உடலில் இருந்து விழும் ரோமங்கள் பிரம்மனின் மரணத்தை குறிப்பதாக கருதப்பட்டது. ஒரு தடவை பிரம்மன் மறையும் போது மட்டுமே அவரது உடலில் இருந்து ஒரு ரோமம் விழுந்து லிங்கமாக மாறியதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ரோமரிஷி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பது உறுதியாகிறது.

    சிவாலயங்களில் தியானம் செய்து திருப்பணிகள் செய்த ரோமரிஷி இறுதியில் சிவனை நேரில் பார்த்து தரிசனம் செய்து சிவமுக்திபேறு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    இதற்காக அவர் அகத்தியரின் உதவியை நாடினார்.

    அவருக்கு உதவ முன் வந்த அகத்தியர், "தாமிரபரணி நதியில் நான் ஒன்பது தாமரை மலர்களை விடுகிறேன்.

    அவை மிதந்து சென்று கரை ஒதுங்கும் இடங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டால் சிவபெருமான் காட்சி தருவார்" என்றார்.

    அதன்படி தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய 9 இடங்களில் சிவாலயம் அமைத்து ரோமரிஷி வழிபட்டார்.

    இறுதியில் தாமிரபரணி நதியும் கடலும் சேர்ந்து சங்கமிக்கும்  இடத்தில் ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்தார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.

    இந்த தலங்களில் வழிபட்டால் ரோமரிஷி பெற்ற பலன்கள் நமக்கும் கிடைக்கும். அதற்கு ரோமரிஷியை போன்று மனமுருக வழிபட வேண்டியது அவசியமாகும்.

    • குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
    • அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.

    சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்வதன் மூலம் ரோமரிஷியின் அருளை பெற முடியும்.

    குறிப்பாக அந்த ஆலயத்தில் உள்ள வட்டபாறையில் ரோமரிஷியின் மந்திரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அந்த பகுதியில் தியானித்தால் சிவபெருமான் அருளுடன் ரோமரிஷி தரும் பலன்களையும் பெறலாம்.

    அதே திருவொற்றியூரில் தேரடி பஸ் நிறுத்தம் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் பகுதியில் இருக்கும் மயிலாண்டவர் ஆலயத்தில் ரோமரிஷி உருவ ரூபமாக இருக்கிறார்.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தை கட்டிய காஞ்சி மன்னன் தொண்டைமானுக்கு ரோமரிஷி முனிவர் காட்சி கொடுத்து அருள் பாலித்ததாக குறிப்புகள் உள்ளன.

    அந்த மன்னன்தான், இந்த ரோமரிஷி ஆலயத்தையும் கட்டியதாகக் கருதப்படுகிறது.

    • சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.

    இதே போன்று ரோமரிஷி தமிழகத்தின் வேறு சில பகுதியிலும் தன்னை பற்றிய பதிவை உருவாக்கி இருக்கிறார்.

    தஞ்சை, கரந்தையில் உள்ள சிதாநாதீஸ்வரர் கோவிலும் ரோமரிஷி சித்தர் தவம் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

    அவர் தவம் இருந்த இடத்தில் சிறிய துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தை ரோமரிஷியின் ஜீவ சமாதி என்றும் சொல்கிறார்கள்.

    சமீப காலமாக இந்த துளசி மாடத்தில் ரோமரிஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்றும் வழிபடலாம்.

    தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கரந்தை அருகில் வடவாற்றங்கரை பூக்குளம் சிதாநந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

    நீண்ட நாள் நோயால் தவிப்பவர்களுக்கு இந்த ஆலயம் பரிகார தலமாக இருப்பதால், ரோமரிஷியின் அருளையும் பெற முடியும்.

    • ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.
    • அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

    அந்த நிலையில் நீராடாமல் ஜம்புகாரண்யேஸ்வரரை தரிசனம் செய்ய ரோமரிஷி புறப்பட்டு வந்தார்.

    இதை கண்டதும் அவரை கோபுர வாசலிலேயே முருகப்பெருமான் தடுத்து நிறுத்தினாராம்.

    இதனால் வேதனை அடைந்த ரோமரிஷி அந்த கோபுர வாசல் அருகிலேயே தவம் இருக்க தொடங்கி விட்டார்.

    தினசரி நீராடல் போன்ற புறத்தூய்மையை விட ஆத்மார்த்தமாக நினைக்கும் அவரது அகத்தூய்மையே சிறந்தது என்பதை உலகத்துக்கு உணர்த்தும் வகையில் கோவிலுக்கு வெளியில் வந்து ரோமரிஷிக்கு ஜம்புகாரண்யேஸ்வரர் காட்சி கொடுத்ததாக அந்த ஆலய தல வரலாறில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்த இடத்தில் தற்போது அவரது அதிஷ்டானம் அமைந்துள்ளது.

    அதன் மீது தான் முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார்.

    இந்த முருகருக்கு குமரகுருபரர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ரோமரிஷியின் அருளைப் பெற விரும்பும் கிருத்திகை நட்சத்திரத்துக்காரர்கள் கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று ரோமரிஷியின் அதிஷ்டானம் அமைந்துள்ள பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும் நிச்சயம் பலன் உண்டு.

    கூந்தலூர் ஆலயத்தின் ஈசான்யம் பகுதியில் இந்த அதிஷ்டானம் இருக்கிறது. ஈசான்யம் பகுதியில் நவக்கிரகங்கள் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இந்த தலத்தில் செவ்வாயுடன் தொடர்புடைய முருகப்பெருமான் அங்கு அமர்ந்து இருப்பதால், எத்தகைய செவ்வாய் தோஷமும் இத்தலத்தில் காலடி எடுத்து வைத்ததும் விலகி ஓடி விடும் என்பது ஐதீகமாகும்.

    சனி கிரக பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தலமாகவும் ரோமரிஷி அதிஷ்டானம் திகழ்கிறது.

    • அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
    • அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.

    அவர் ஆனி மாதம் கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் என்பது உறுதியாகி உள்ளது.

    அவர் ஜீவ சமாதி அடைந்ததற்கான உறுதியான தகவல்களும் இல்லை.

    அதற்கு காரணம் அவர் உடல் அழியவில்லை.

    அவர் கைலாய மலைக்கு சென்று ஜீவ சமாதி அடைந்ததாக பெரும்பாலான ஆய்வு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவர் வாழ்ந்துள்ளார். பல சிவாலயங்களுக்கு சென்று தியானம் இருந்து திருப்பணிகள் செய்துள்ளார்.

    ரோமரிஷி வைத்தியம் ஆயிரம், ரோமரிஷி சூத்திரம் ஆயிரம், ரோமரிஷி ஞானம் 50, ரோமரிஷி பெருநூல் 500, ரோமரிஷி காவியம் 500, ரோமரிஷி மூப்பு சூத்திரம் 30, ரோமரிஷி ஜோதிட விளக்கம் போன்று ஏராளமான நூல்களை எழுதி உள்ளார்.

    அதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைத்து உள்ளன.

    அந்த பாடல்களின் மூலம் ரோமரிஷி பற்றி பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவர் வாழ்ந்ததற்கான தடயங்கள் இப்போதும் உள்ளன.

    கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் ஜம்புகாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தங்கி இருந்து அவர் செய்த அற்புதங்கள் இப்போதும் பேசப்படுகிறது.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த ஆலயத்தில் அவர் தவம் செய்யும்போது தனது தாடியை தடவி தங்கத்தை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுப்பாராம்.

    ஒரு தடவை அவர் தாடி வழியே தங்கம் வருவது நின்று போனது.

    உடனே தாடியை மழித்து அகற்றி விட்டார்.

    என்றாலும் ஈசனிடம் சரண் அடைய அவர் மனம் விரும்பியது.

    • இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.
    • இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

    ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த அனைவருக்கும் இத்தனை பாக்கியமும் ஒருசேர ஒருங்கே கிடைத்து விடுவதில்லை.

    இந்தப் பாக்கியங்களை பெற சித்தர்களை நாடி தியானம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு.

    கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்த அல்லது முக்தி பெற்ற சித்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

    மயிலாடுதுறை பால் சுவாமிகள் (மார்கழி&கார்த்திகை), ஞானாந்தகிரி சுவாமிகள் (தை&கார்த்திகை) மதுரை காதகிணறு நடனகோபால சுவாமிகள் (மார்கழி&கிருத்திகை) கிருத்திகையுடன் தொடர்புடையவர்கள்.

    கொடுமுடி அருகே சிவகிரியில் உள்ள ராமானந்த சித்தர் ஜீவ சமாதியில் கிருத்திகை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    ஆனால் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முழு பயனை அடைய வேண்டுமானால் ரோமரிஷி சித்தரை நாடி செல்ல வேண்டும்.

    இவர் அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் ஆவார். காகபுஜண்டரின் முதன்மையான சீடர் ஆவார்.

    இவர் ரோமில் இருந்து வந்ததால் ரோம ரிஷி என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

    ஆனால் இவர் உடல் முழுக்க முடி (ரோமம்) இருந்ததால் இவருக்கு ரோம ரிஷி என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு கருத்து உண்டு.

    ஆனால் போகர் தனது பாடலில், "ரோமரிஷி செம்படவருக்கும் குறத்திக்கும் பிறந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் ரோமரிஷிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

    அதே போன்று அவரது அவதாரம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

    • தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமும் கிருத்திகையே.
    • இதனால் இந்த நட்சத்திரத்திற்கு தனித்துவம் உண்டு.

    நட்சத்திர வரிசையில் 3வது இடத்தில் கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரம் உள்ளது.

    ஆனால் 27 நட்சத்திரங்களில் சூரியனின் முதல் நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகைதான்.

    கத்தி போல அமைந்துள்ள நட்சத்திர கூட்டமே கிருத்திகை.

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமும் கிருத்திகையே.

    இதனால் இந்த நட்சத்திரத்திற்கு தனித்துவம் உண்டு.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை அவசியம் வழிபட வேண்டும்.

    கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சிக்கலில் உள்ள சிங்காரவேலனின் தரிசனம் நன்மை தரும்.

    2, 3, 4ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு திண்டிவனம் அடுத்துள்ள மைலம் முருகன் தலம் மகத்துவம் கொடுக்கும்.

    பொதுவாக கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள்.

    சுறுசுறுப்பும், வெளிப்படையான பேச்சும், தெய்வ பக்தியும் இவர்களது இயல்பு.

    ஆடை அணிவதில் கூட இவர்களிடம் ஒரு நேர்த்தியை பார்க்க முடியும். 

    • பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.
    • ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.

    கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீடாடுவது மிகவும் நல்லது.

    அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம்.

    ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது.

    எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் நாலு ஜாமமும் சிவ பூஜைக்கு விசேஷமாகும்.

    கார்த்திகை மாதம் அமாவாசை சோமவாரமும் சேர்ந்தால் அன்று அரசமர பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    அரச மர பிரதட்சணத்தின் மூலம் மும்மூர்த்திகளை பிரதட்சிணம் செய்த பலன் உண்டு.

    இதையேதான் பகவானும் பகவத் கீதையில் மரங்களுள் அரசமரமாக நான் இருக்கிறேன் என்றார்.

    கார்த்திகை பௌர்ணமியில் அன்னதானம் மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.

    பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.

    பஞ்ச பூத தலங்களுள் ஜோதி தலமாக திருவண்ணாமலை தலம் திகழ்கிறது.

    ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.

    இப்படிப்பட்ட தலம் திருவண்ணாமலை.

    திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல், தீபம் ஏற்றப்பட்டு ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம்.

    ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும்.

    புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும்

    ஆகாசத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும், நலல கதி கிடைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து,

    சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு ப்ரார்த்தனை செய்வார்கள்.

    ஒவ்வொரு கோயிலிலும் பழமை எல்லாம் கழித்து பாபங்களை பொசுக்கும் நினைவாகவும், நல்ல சொர்க்க

    லோகத்திற்கு செல்லும் நினைவாகவும் சொக்கபானை (ஸ்வர்க்கபானை) கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஆகவே கார்த்திகை மாதம் புனித நீராடல், தானம், பூஜை, பிரார்த்தனை, ஞானம் இத்தனையும் வருகிறது.

    இதனால் தான் மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் விசேஷமான மாதமாகிறது.

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி

    ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்

    அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய்

    தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக உங்களால் வளர்க்கப்பட்ட

    இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு

    அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும்,                                                               அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர்.

    அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும்.

    பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

    எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.

    திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.

    ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார்

    என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி

    விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம்,

    பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோவிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

    சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.

    • தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
    • இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.

    தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள்.

    இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.

    கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள்.

    சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

    இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர்,

    அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.

    ×