search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி"

    • கூட்டத்தில் பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொது மக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுஇடத்தில்  1.5 ஏக்கர் பொது இடத்தை ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள  மதுரை வீரன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இடத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருந்தது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீண்டும்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டுமென  அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இந்த போராட்டத்தில்  தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் கண்ணையன், அரசம்பாளையம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1200-க்கும் மேற்பட்டோர் பணி  செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அட்டை வழங்க  ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தனர்.  மேலும், ரூ.1000  கட்டினால் மட்டுமே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த   200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி   மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி  போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இப்பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகளோ, ஊராட்சி தலைவரோ நேரில் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது. 

     4 மணி நேரத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள  பொறுப்பாளர்களை வைத்து புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் கூறியதாவது:-

     அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாததால் இப்பகுதியில் நடைபெறும் ஊராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், ஏற்கனவே ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் வருவதில்லை எனவும், இது குறித்து ஒன்றிய ஆணையாளரிடம்  தெரிவித்தால், அவர் தலைவர் சொல்படி கேளுங்கள் என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்
    ராமநாதபுரம் மாவட்டத்தில், 61 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடக்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமம், கமுதியில் முஷ்டக்குறிச்சி ஊராட்சி உள்பட 61 ஊராட்சிகளின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழா நடந்தது. 

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்தந்த ஊராட்சிகளில் உள்ளாட்சித் தலைவா்கள், அதிகாரிகள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    வண்ணாங்குண்டுவில் நடந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதா்பாட்சா முத்துராமலிங்கம், கலெக்டர் சங்கா்லால் குமாவத், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமாா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் டாம்பி. சைலஸ் ஆகியோர் கலந்து கொண்டனா்.

    நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உரங்கள், வேளாண் முனைவோருக்கான மானியக் கடனுதவிக்கான காசோலைகள், ஆழ்துளை மற்றும் திறந்தவெளிகிணறு அமைப்பதற்கான உத்தரவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. 

    கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், வேளாண்மைத் துறை துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
    ×