என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
- கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
- கும்பகோணம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சுவாமிமலை:
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடம் கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினரும், கும்பகோணம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான அசோக்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.எஸ்.பாலசுப்ரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி லட்சுமி பிரியா, மாவட்ட பிரதிநிதி குணாளன், பேரூராட்சி உறுப்பினர்கள் குணசேகர், இளவரசி ராமலிங்கம், ராதிகா ஜெய்சங்கர், கலா ராமமூர்த்தி மற்றும் செழியன், ஆறு.மதியழகன், யூசுப், கோபால் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.