search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Meeting"

    • வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.
    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் உள்ள வைகை இல்லத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்புக்குழு அலுவலர்களை நியமித்து, மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவ லகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவல கங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் உரிய வசதிகளை செய்து தருதல் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், உட்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளி கல்வித்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறும்பா ன்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை மற்றும் நெடுஞ்சா லைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொ ண்டார்.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வைகை அணை பகுதியை பார்வை யிட்டு, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் வைகை அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டுகோள்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் மற்றும் வழூர் கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், டி.கே.பி.மணி, ஒன்றிய செயலாளர் லோகேஸ்வரன், சித்ரா கலையரசு, ராஜேஷ், பிருதூர் செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • “பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

    அவினாசி:

    அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மன்றபொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசியதாவது:-

    கார்த்திகேயன்:-எந்த வேலை வந்தாலும் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு எப்போதும் தகவல் தெரிவிப்பதே இல்லை. அரசுத்துறை வேலைகள் எதுவும் தெரிவதில்லை. ஊருக்குள் வேலை நடப்பதை பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இது மிகவும் வருந்தத்தக்கது. அவினாசி ராஜன் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. கழிவறை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறைக்குள் தண்ணீர் சேமிப்பு டேங்க் இல்லை. இதனால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

    சீனிவாசன்:- உப்பிலிபாளையம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காமல் இருக்கிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது என்றார்.

    சேது மாதவன்:- பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் மயானத்திற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும் என்றார். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், "பள்ளியில் இடைவிலகல் மாணவர்களை இல்லம் தேடி சென்று மீண்டும் பள்ளியில் சேர வலியுறுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். கடந்த கல்வியாண்டில் 256 மாணவர்கள் பள்ளி இடைவிலகலாக இருந்ததை கலவித் துறையின் முயற்சியால் 108 ஆக அது குறைந்துள்ளது. எனவேவார்டு கவுன்சிலர் ஆகிய நீங்கள் அனைவரும் இதுபோல் பள்ளி விலகலை கண்டறிந்து எங்களுக்கு தகவல் கொடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    • காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன் தலைமை தாங்கினார்.
    • பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும் என கூறினர்.

    அவினாசி:

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு அரங்கில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் கோபி பழனியப்பன் தலைமை தாங்கினார். மேற்கு வட்டார தலைவர் கொங்கு தங்கமுத்து, வடக்கு வட்டாரத்தலைவர் லட்சுமணசாமி, கிழக்கு வட்டாரத்தலைவர் குமாரசாமி, அவினாசி நகர தலைவர் பொண்ணு குட்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத்கமிட்டி புதுப்பிப்பது, வட்டாரத்தலைவர்கள் நகரத்தலைவர்கள் இல்லத்திலேயே காங்கிரஸ் பேரியக்க மூவர்ணக்கொடிகளை பறக்க விடுவது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் விதமாக அனைத்து வட்டார நகர தலைவர்களும் தங்களது கமிட்டிகளை உடனடியாக அமைப்பது.

    அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட கூட்டுறவு சங்கங்களில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து தேர்தலில் போட்டியிட முயற்சித்தல், வட்டார, நகரத்திற்குட்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் அசையா சொத்துக்கள் இருப்பின் அதை மீட்டெடுக்க மாவட்ட கமிட்டிக்கு தகவல் தெரிவித்தல், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் இறைப்பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பித்தல், பல்லடத்தில் கொலை செய்யப்பட்ட 4பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்தது முதல், 2 வயது வரை, 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய அளவில் இந்த திட்டம் அடுத்த மாதம் 7ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அவர்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உறுப்பினர் செயலர், தடுப்பூசி திட்ட கண்காணிப்பு நல அலுவலர் வேலன், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ஊட்டச்சத்து துறை, தொழிற்சாலை துறை, தொழிலாளர் நல துறை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

    வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர் குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, இதற்காக துறை வாரியாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பு, பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவற்றை முற்றிலும் சாப்ட்வேர் மூலம் முழுமையாக பதிவேற்றம் செய்து, தினமும் இதன் விவரங்களை குழுவுக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
    • 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது.

    புதுவை மருந்து உற்பத்தி யாளர்கள் சங்க அலுவ லகத்தில் நடந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்ட மைப்பின் வேண்டுகோளை ஏற்று வழுதாவூர் சாலை புதுவை எல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை யில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தி கொடுத்த

    தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹேம சந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வருகிற 12-ந் தேதி குரும்பாப்பட்டு சமுதாய நல கூடத்தில் நடைபெறும் கண்காணிப்பு கேமரா தொடக்க நிகழ்ச்சி மற்றும் ஊசுடு தொகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமை யில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    முடிவில் குரும்பாப்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு செயலாளர் மோகன் நன்றி தெரிவித்தார்.

    • 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
    • காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் தலைமை வகித்தாா்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா ஜவஹா் முன்னிலை வகித்தாா். இதில் குடிநீா்க் குழாய்களை மேம்படுத்தல், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் பெயா்ந்த பின்னா் தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படும் வகையில் பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட 23 தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. திருப்–பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதிய உறுப்பினர் சேர்க்கை பணி குறித்தும், கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறை–யில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வருகிற 30-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிமையை பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை செயலாளர்கள் குமார், நந்–தினி, சேகர், பொருளாளர் சாமிநாதன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை பொதுக்–குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வக்கீல் எஸ்.குமார் தலைமையில் துணைத்தலைவர் அபிராமி அசோகன் முன்னிலையில் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் லோகுபிரசாத் (திமுக) பேசுகையில்: கள்ளகிணறு கருப்பராயன் கோயில் முதல் லட்சுமி நகர் வரை தார் சாலை அமைத்தல் பணி முடிந்து அதனை தொடர்ச்சியாக உள்ள மண் சாலை வழியாக, ஒரு பாலம் அமைத்து கொடுத்து மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    ஜோதி பாசு(இ.கம்யூ) : கடகம்திருடியபாளையத்திலிருந்து டி. ஆண்டிபாளையம் வரையிலும், வேலம்பட்டியில் இருந்து மசநல்லாம் பாளையம் வரையிலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 7 வாரங்களாக பயனாளிகளுக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை. இதில் மொத்தம் 1400 பயனாளிகளில் 400 பயனாளிகளின் ஆதார் கார்டு இணைப்பு ஆகவில்லை என வேலைக்கு அனுமதிக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். டி. ஆண்டிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடைக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக செய்து தர வேண்டும்.

    சுப்பிரமணி(தி.மு.க) : பொல்லிக்காளிபாளையம் செல்லும் பள்ளி மாணவர்களின் வசதிக்காக நல்ல காளிபாளையம் வழியாக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். .ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் பேசுகையில்: பொங்கலூர் ஒன்றியத்தில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுத்த முயற்சியால் ஒன்றிய பகுதியில் அரசால் நிர்ணயக்கப்பட்ட அளவில் 75 சதம் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது. அதற்காக குடிநீர் வடிகால் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 15வது நிதிக்குழு மானியம் நிதியில் அனைத்து ஒன்றிய குழு வார்டு பகுதிகளிலும் 7 பணிகள் தேர்வு செய்யப்பட்டு கிராமப்புற அடிப்படை மேம்பாட்டு வேலைகள் நடைபெறவுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) மீனாட்சி நன்றி கூறினார்.

    • சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.
    • சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க கூடாரங்களில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் தாலுகா தேங்காய் கொப்பரை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.பி.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின்கவுரவ ஆலோசகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் சங்கத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்தும், தொழில் முன்னேற்றம் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் ஜி.எஸ்.கவுரிசங்கர், பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால், செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் உள்பட சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டியில் இளையோர் வில்வித்தை சங்க ஆண்டு செயற்குழு கூட்டம் நடந்தது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட இளையோர் வில்வித்தை சங்க ஆண்டு செயற்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கவுரவத் தலைவர் மணிமாறன், தலைவர் தமிழ்வாணன், செயலாளர் விஜயகுமார், கவுரவ செயலாளர் ராஜ்நாராயணன், பொருளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். 

    செயற்குழு உறுப்பினர் இளையராஜா பார்த்திபன், மைதிலி, கென்னடிதாசன், சுதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தக் கூட்டத்தில் வில்வித்தை பயிற்சியை அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு மூலம் கற்று கொடுத்தல், மாணவ- மாணவிகளுக்கு வில்வித்தை பயிற்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சங்கத்தின் மூலம் வில்வித்தை பயிற்சி வகுப்புக்கு தேவையான பொருட்களை நன்கொடையாளர் மூலம் பெறுதல், டிடிபி ஸ்போர்ட்ஸ் அகடமி மைதானத்தை தலைமை மாவட்ட பயிற்சி மைதானமாக அறிவித்தல், புதிய உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்தல், மாநில மற்றும் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டிகளை திருவாரூர் மாவட்டத்தில் நடத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×