என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிட்டி கூட்டம்"

    • சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
    • தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வரும் தேர்தல்களை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

    மாநிலம் தழுவிய அளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் போராட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    • நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டுகோள்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் மற்றும் வழூர் கிராமத்தில் வந்தவாசி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு நிர்வாகி களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், டி.கே.பி.மணி, ஒன்றிய செயலாளர் லோகேஸ்வரன், சித்ரா கலையரசு, ராஜேஷ், பிருதூர் செல்வகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×