என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
- பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.
நாகர்கோவில் :
குடியரசு தினத்தை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.
பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சனை, உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,திடக்கழிவு மேலாண்மை திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணி கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் அரவிந்த் கூறுகையில்:- குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.
பறக்கை ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் தனிநபர் உறிஞ்சி குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.நமது மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். எனவே பொதுமக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டாமல் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் போட வேண்டும்.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா ஆர்டிஓ சேதுராமலிங்கம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.