மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சி.
கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சி.
Published on

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டமானது மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள ரேசன் கடை வளாகத்தில் நடைபெற்றது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவது எனவும், மங்கலம் ஊராட்சியை பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத ஊராட்சியாக மாற்றுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com