என் மலர்
நீங்கள் தேடியது "panchayats"
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தின் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் கூட்டம் நடத்துவதற்கான செலவு தொகையை ரூ.1000த்தில் இருந்து ரூ.5000மாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சியின் 1.4.2022 முதல் 31.7.2022 முடியவுள்ள காலாண்டின் வரவு செலவு விபரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்காக தகவல் பலகை வைக்கப்பட்டது. மேலும், கிராம சபையில் வரவு செலவுக் கணக்குகள் ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழக அரசால் 15.8.2022 முதல் 2.10.2022 வரை தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை மையப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு எழில் மிகு கிராமம்" என்ற சிறப்பு பிரச்சாரம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பல்வேறு துறைகள் மற்றும் சமூக பங்கேற்புடன் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்து செயல்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - 2 திட்டத்தின் கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், 2010-க்கு பின்னர் புதிய குடிசைகள் அமைத்துள்ளோர் விவரம் குக்கிராமம் வாரியாக கணக்கெடுத்தல், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் பயனடையும் வகையும் அரசின் நடவடிக்கைகள் குறித்தும், பயனாளிகள் பட்டியல் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.
பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்களைப் பற்றி விளக்கினார்கள். மேலும், ஊத்துக்குளி வட்டாரம், சின்னேகவுண்டன்வலசு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். திருப்பூர் வட்டாரம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மா வட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்-திட்ட இயக்குநர் கலந்து கொண்டார்.
- நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன.
- நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்:
இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானத்தை தேடி சென்ற நிலை மாறிவிட்டது. நகர்ப்புறத்தில் பெரும்பாலான உடல்கள் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கிராமப்புற மக்கள் பயன்படுத்த வசதியாக, நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனம், மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், மங்கலம், சின்ன மருதூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும், 32.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் எரிவாயு தகன மேடை வாகனம் பயன்பாட்டுக்கு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் நடமாடும் எரிவாயு தகனமேடை வாகனத்தின் சாவிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.