589 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்- கலெக்டர் தகவல்

தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் நாளை (திங்கட்கிழமை) தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

எனவே கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று கிராமசபை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com