search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Computer purchase"

    • ஒவ்வொரு ஊராட்சிகளும், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க ஊரக வளர்ச்சி முகமை அனுமதியளித்துள்ளது.
    • கம்ப்யூட்டர் பழுதானால், திரும்ப மாற்றிக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அவிநாசி:

    தமிழகத்தில், 12, 500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி அலுவலக பணிகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் வரி வசூல் திட்டமும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.ஒவ்வொரு ஊராட்சிகளும், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க ஊரக வளர்ச்சி முகமை அனுமதியளித்துள்ளது.

    கம்ப்யூட்டர், பிரின்டர், யு.பி.எஸ்., உள்ளிட்ட உபகரணங்கள் சேர்த்து1.50 லட்சம் ரூபாய் வரையிலான நிதியை ஊராட்சி பொதுநிதி அல்லது மாநில நிதிக்குழு மானிய நிதியில் செலவிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின்இ-சந்தை (GeM) இணைய தளம் வாயிலாக, கம்ப்யூட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. செயலியை பதிவிறக்கம் செய்து, விரும்பும் நிறுவனத்தின் கம்ப்யூட்டரின் பெயரை குறிப்பிட்டால், இ-சந்தையில் இணைந்துள்ள வர்த்தகர்கள், தங்கள் விலையை குறிப்பிடுவர்.இதில், குறைந்த விலைப்புள்ளியை குறிப்பிட்டு ஊராட்சி தலைவர்கள் கம்ப்யூட்டரை கொள்முதல் செய்து கொள்ளலாம்.அந்த கம்ப்யூட்டர் பழுதானால், திரும்ப மாற்றிக் கொள்ளவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இ- மார்க்கெட்டிங் மூலம் கம்ப்யூட்டர் கொள்முதல் செய்யப்படுவதன் மூலம், அதன் தரம், விலை உறுதி செய்யப்படுகிறது என்றனர்.

    ×