search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக சொத்துவரி செலுத்த வசதி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    வரி செலுத்தியதற்கான ரசீதை கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி. 

    ஊராட்சிகளில் ஆன்லைன் மூலமாக சொத்துவரி செலுத்த வசதி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.
    • யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்துவதற்கு வசதியாக http://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் ஆகியவற்றை செலுத்தலாம். இதில் ஆன்லைன் பேமெண்ட், டெபிட், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்.கார்டுகள், யு.பி.ஐ. கட்டணம், பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாகவும் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஊரக பகுதிகளில் பொதுமக்கள் மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்த தேவையான அனு–ம–தி–களை எளி–தில் பெற ஒற்றை சாளர முறையில் இதற்கென பிரத்யேக இணையதளம் http://onlineppa.tn.gov.in/ உருவாக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரி வசூல் செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவிந்தாபுரம் ஊராட்சி தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×