என் மலர்
இந்தியா

சிபிஐ அலுவலகம் முன் அதிகாரியை வில் அம்பால் தாக்கிய ரெயில்வே முன்னாள் ஊழியர்: அதிர்ச்சி பின்னணி..!
- ஊழல் விசாரணை நடத்திய அதிகாரியை பழிவாங்க ரெயில்வே முன்னாள் வீரர் திட்டம்.
- பீகாரில் இருந்து லக்னோ சென்று வில் அம்பால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன் உதவி துணை-ஆய்வாளரை ரெயில்வே முன்னாள் ஊழியர் வில் அம்பால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உதவி துணை ஆய்வாளர் ஏ.எஸ்.ஐ. விரேந்திர சிங் (55) மார்பக்கத்தில் அம்பு பாய்ந்து காயம் அடைந்தார்.
இதன் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த தினேஷ் முர்மு (65) என்பவர் ரெயில்வேயில் கேங்மேனாக பணிபுரிந்தள்ளார். கடந்த 1993-ல் ரெயில்வேயில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்ததில் விரேந்திர சிங் ஒருவராக இருந்துள்ளார்.
ஊழல் தொடர்பான விசாரணை முடிவில் தினேஷ் முர்மு, வேலையை இழந்துள்ளார். இந்த நிலையில்தான் பழிக்குபழி வாங்கும் விதமாக தற்போது லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வெளியில் வில் அம்புகளை கொண்டு தாக்கல் செய்துள்ளார்.
தினேஷ் முர்மு கடந்த 2005ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரியை சந்திக்க டெல்லிக்கு சென்றார். அப்போது போலீசாரை தாக்கியதால் சிறைக்குச் சென்றார். 2015ஆம் அண்டு ஜான்பூர் ரெயில் நிலையத்தில் ஜிஆர்பி வீரரை தாக்கியதால் மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் விசாரணை நடத்திய அதிகாரியை தாக்கியுள்ளார்.






