search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Saudi"

  இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா நகரின் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
  ரியாத்:

  ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் அரசு தொடர்ந்து ஆதரவு அளிப்பதுடன் மறைமுகமாக ஆயுதங்களையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏமன் அரசின் ஆட்சி நாடுகடந்த அரசாக அருகாமையில் உள்ள சவுதி அரேபியாவில் இருந்து இயங்கி வருகிறது.

  இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா நகரின் மீது இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

  2015-ம் ஆண்டுக்கு பின்னர் மெக்கா நகரை குறிவைத்து ஹவுத்தி போராளிகள் நடத்திய மூன்றாவது தாக்குதல் இது என சவுதி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

  சவுதியில் இருந்து ஆட்சி நடத்திவரும் நாடுகடந்த ஏமன் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி முவம்மர் அல்-இர்யானி, ஈரான் அரசின் உத்தரவின்படி மெக்கா நகரத்தின்மீது ஹவுத்தி போராளிகள் இன்று இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அந்த ஏவுகணைகளை கூட்டுப்படைகளின் ஏவுகணைகள் வழிமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், சவுதி அரேபியாவின் நஜ்ரான் மாவட்டத்தில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கின்மீது வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் இன்று தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஆயுத கிடங்கு நாசமானதாகவும் அவர் தெரிவித்தார்.  ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஏமனில் உள்ள ஹவுத்தி போராளி குழு தலைவர்கள் மறுத்துள்ளனர். இதுபோன்றதொரு தாக்குதல் நடத்தி இருந்தால் அதற்கு நாங்கள் நிச்சயமாக பொறுப்பேற்றுக் கொள்வோம். இதில் அச்சப்பட ஏதுமில்லை. ஆனால், இந்த தாக்குதல்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

  சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசி ஹவுத்தி போராளிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதால் கச்சா எண்ணெய் வினியோகம் தற்காலிகமாக சீர்குலைந்தது.

  இதற்கிடையில், வளகுடா நாடுகளின் ஒத்துழைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு மாநாடுகளை அடுத்த வாரம் மெக்கா நகரில் நடத்த சவுதி அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் இன்று மெக்காவின் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது. பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் என சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree
  புதுடெல்லி:

  சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பில் சல்மான் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, இருநாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

  இந்த ஒப்பந்தத்தையடுத்து, சவுதி இளவரசரும் பிரதமர் மோடியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

  புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய மோடி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

  சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ள சவுதி அரசை வரவேற்பதாகவும் இந்தியா-சவுதி இடையிலான ராணுவ கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

  பின்னர் பேசிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், ‘தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்தை வேரறுக்க உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்புநாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய உங்களுடன் ஒன்றிணைந்து நாங்கள் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.

  பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என்னும் இந்தியாவின் நிலைப்பாட்டை சவுதி அரேபியா ஆதரிக்கின்றது. இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் எனவும் சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree 
  துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடலை மதீனாவில் புதைக்க விரும்புவதாக அவரது மகன் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார். #JamalKashoggi #Saudi #SalahKhashoggi #AbdullahKhashoggi #Medina
  ரியாத்:

  சவுதி அரேபியாவின் முடியாட்சியை மிக கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டு வந்தவர் ஜமால் கசோக்கி. இவர் சமீபத்தில் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது.

  இந்த கொலை உலகின் பல்வேறு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சவுதி அரசுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த கொலை தொடர்பாக 8 பேரை கைது செய்த சவுதி அரசு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜமால் கசோக்கியின் மகன் சாலா கசோக்கி, தனது தந்தையின் இழப்பை இன்று வரை நம்பமுடியவில்லை எனவும், அவரது பிரிவு மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும், தங்களது தந்தைக்கு முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டிய கடமை இருப்பதாகவும், அவரது உடலை இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மதீனாவில் உள்ள அல் பக்கி இடுகாட்டில் அடக்கம் செய்ய விரும்புவதாகவும் சாலா கசோக்கி தெரிவித்துள்ளார்.

  கொலை செய்யப்பட்ட ஜமால் கசோக்கியின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை என்பதும், உடலை அடையாளம் காண முடியாதபடி முழுமையாக அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. #JamalKashoggi #Saudi #SalahKhashoggi #AbdullahKhashoggi #Medina
  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மங்கள் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
  பெர்லின்:

  சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது.

  இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

  480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
  பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானுக்கு சவுதி மன்னர் சல்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #ImranKhan #Pakistan #Saudi #KingSalman
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் வருகின்ற 18-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல், இளவரசர் முகமது பின் சல்மானும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  இதேபோல், ஜப்பான், ஈரான் போன்ற பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை இம்ரான் கானுக்கு தெரிவித்து வருகின்றனர். #ImranKhan #Pakistan #Saudi #KingSalman
  ஏமன் நாட்டில் சவூதி அரேபியாவின் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சார்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #Hezbollah
  சனா:

  ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக சவூதி தலைமையிலான கூட்டுப்படை சண்டையிட்டு வருகிறது.

  இந்நிலையில், ஏமனின் வடக்கு பகுதியில் சவூதி எல்லைப்பகுதியில் சவூதி அரசின் கூட்டுப்படைகள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 41 கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட்டதாகவும், அதில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகவும் சவூதி கூட்டுப்படை தளபதி துர்கி அல்-மாலிகி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Yeman #saudicoalition #Hezbollah
  ரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும் ஏவுகணைகளை கத்தார் வாங்கினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #Saudi #Qatar
  ரியாத்:

  சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகள் கத்தார் உடனான தூதரக மற்றும் வியாபார ரீதியிலான உறவை கடந்தாண்டு துண்டித்தது. இதற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

  கத்தார் நாட்டு அரசு பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக கூறி வளைகுடா நாடுகள் அந்நாட்டுடனான உறவை துண்டித்தன.
  இந்நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் கத்தார் அரசு ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரியில், விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மாக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியில், கத்தார் நாடு ஏவுகணை வாங்குவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க சவுதி அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயார் எனவும்
  குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும், பிரான்ஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆயுத பரிமாற்றத்தை தடுத்து அமைதி நிலவ வழிசெய்யுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது.

  ஆனால் இதுவரை இதுகுறித்து பிரான்ஸ் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Saudi #Qatar 
  ஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக சவுதி அரசின் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.#Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
  சனா:

  ஏமன் நாட்டில் பதவியிறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

  ஏமன் நாட்டின் அண்டை நாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா பயங்கரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

  இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

  இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள மரிப் நகரின் மீது ஹவுதி படை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #Houthimovement #missileattack #Yemen #SaudiArabiya #civilianskilled
  ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் வீசிய ஏவுகணையை சவுதி அரேபியா போர் விமானங்கள் வழிமறித்து தாக்கி அழித்தது.#SaudiAirDefenses
  ரியாத்:

  ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப் போராட்டமாக திசைமாறியது.

  ஏமன் நாட்டின் அண்டைநாடான ஈரானின் ஆதரவுடனும், அல் கொய்தா தீவிரவாதிகளின் துணையுடனும் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப்படையினர் தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

  இந்த பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு படைகள் ஏமன் அரசுக்கு உதவிசெய்து வருகின்றன.

  அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் சுமார் 3 கோடி மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

  இந்நிலையில், ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ஜஸான் நகரில் உள்ள விமான நிலையத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா விமானப்படையை சேர்ந்த போர் விமானங்கள் அந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழித்ததாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.#SaudiAirDefenses
  ×