என் மலர்

  நீங்கள் தேடியது "Khashoggi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
  நியூயார்க்:

  சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

  இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28-ந்தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ந்தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டார்.  அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JamalKhashoggi #MohammedBinSalman #UN
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொன்றது யார்? என இன்னும் இரு நாட்களில் அமெரிக்கா அம்பலப்படுத்தும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Khashoggi #SaudiPrince
  வாஷிங்டன்:

  துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. நேற்று குற்றம்சாட்டியுள்ளது.   சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டிருந்தார்.

  இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மாலிபு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜமால் கஷோக்கியை கொன்றது யார்? எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான முழு விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பகிரங்கப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். #Khashoggi #SaudiPrince #CIA #Trump
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துருக்கி நாட்டு தூதரகத்தில் மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்கு சவுதி இளவரசர் மீது அமெரிக்க உளவுப்படை குற்றம்சாட்டியுள்ளது. #Khashoggi #SaudiPrince #CIA
  வாஷிங்டன்:

  சவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.

  இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில்  உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் தேதி சென்றார். அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

  ஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை தீர்த்துகட்டி விட்டு, பிரேதத்தை மறைத்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கேமரா பதிவுகளை துருக்கி நாட்டு போலீசார் வெளியிட்டனர். இதை சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

  இதன் அடிப்படையில் புலனாய்வு செய்துவந்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அந்த விசாரணையை இன்று நிறைவு செய்தது.  சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் உத்தரவின்பேரில் அங்கிருந்து சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான தனி விமானத்தில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகருக்கு வந்த 15 பேர், இங்குள்ள சவுதி நாட்டு தூதரகத்துக்கு ஜமால் கஷோகியை வரவழைத்தனர்.

  தூதரகத்தினுள் அவரை மயக்கத்துக்குள்ளாக்கி துண்டுத்துண்டுகளாக வெட்டிக் கொன்று, உடலின் துண்டங்களை ஒரு தூதரக அதிகாரி வீட்டின் கிணற்றில் போட்டு மறைத்து விட்டனர் என இந்த விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

  பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும், கவனத்துக்கு வராலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளார். #Khashoggi #SaudiPrince #CIA
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில்தான் விசாரணை - நடைபெறும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #Khashoggikillers #JamalKashoggi
  மனாமா:

  துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான குற்றவாளிகள் 18 பேரை சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும்.

  அவர்கள்மீது எங்கள் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, தண்டனை விதிக்கப்பட வேண்டும் என துருக்கி அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.  இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரையும் நாங்கள் கைது செய்து காவலில் அடைத்துள்ளோம்’ இதுதொடர்பான விசாரணையும் சவுதி அரேபியா நாட்டில்தான் நடைபெறும் என சவுதி வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார். #Khashoggikillers #JamalKashoggi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மங்கள் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
  பெர்லின்:

  சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது.

  இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

  480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கருத்து தெரிவித்துள்ளார். #JamalKhashoggi #MohammedBinSalman
  ரியாத்:

  சவுதி அரேபிய மன்னராட்சியையும், இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் சவுதி தூதரகத்தில் கடந்த 2-ந் தேதி மாயமான நிலையில், அவர் அங்கேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல், உலக அரங்கை உலுக்கி உள்ளது.

  இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மிக மோசமான முறையில் கசோக்கியை கொலை செய்து மூடி மறைத்து விட்டது என்று அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக சவுதி அரேபியா திகழ்ந்தபோதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.  இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நடைமுறையில் சவுதி அரேபியாவை ஆளுகிறவர், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான். எனவே கசோக்கி மரணத்துக்கு காரணமான நடவடிக்கைக்கு இறுதி பொறுப்பை அவர்தான் ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

  இது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு டிரம்ப் கொடுத்த அழுத்தமாக அமைந்துள்ளது.

  இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த முகமது பின் சல்மான், இப்போது தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

  ரியாத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு முகமது பின் சல்மான் இதுபற்றி கூறும்போது, “கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “கசோக்கி படுகொலையை தொடர்ந்து எழுந்துள்ள பரபரப்பு, சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளை தடம் புரளச்செய்து விட முடியாது” எனவும் கூறினார்.  #JamalKhashoggi #MohammedBinSalman 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவூதி அரேபியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் இரப்புக்கு அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. #JamalKhashoggi #WhiteHouse
  வாஷிங்டன்:

  சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.

  அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

  இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதாக சவூதி ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, கசோக்கி கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 18 பேரை கைது செய்துள்ளதாக சவூதியின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளர் சாரா சாண்டரஸ், பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

  இதேபோல், ஐ.நா.வின் பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜமால் கசோக்கியின் கொலை மிகவும் துயரம் அளிப்பதாகவும், இந்த  சம்பவம் குறித்து விரிவான விசாரணை தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #JamalKhashoggi #WhiteHouse
  ×