என் மலர்
நீங்கள் தேடியது "white house"
- கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்.
- ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.
"குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் துவங்க இருக்கும் நிலையில், அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்," என்று மருத்துவர் கெவின் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத துவக்கத்தில், புதிய வகை கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் துவங்கி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்து இருக்கலாம், ஆனால் அமெரிக்காவில் இன்றும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது.
ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக புதிய தடுப்பு மருந்து பலரின் உயிரை காக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அவருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது.
- கனடா, இந்தியா நாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் கனடாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது என வெள்ளை மாளிகை கூறியது.
வாஷிங்டன்:
இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சாட்டியது.
தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் கனடா அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
மேலும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை நான் உறுதியாக நிராகரிக்கிறேன்.
குற்றச்சாட்டுகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். விரைவில் விசாரணை முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
- வெள்ளையர்கள் பலர் இந்திய வேத மந்திரங்களை சரியாக உச்சரித்தனர்
- வேத யூனியன் எனும் அமைப்பு ஐரோப்பாவில் உள்ள இந்து மதத்திற்கான அமைப்பு
இந்தியாவின் தொன்மையான மதமான இந்து மத தெய்வ வழிபாட்டு முறைகளில், வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் புனித வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவது வழக்கம். கடந்த 4 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளிலும் இந்து மத நம்பிக்கைகளும் வழிமுறைகளும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு பரவி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலானது. அதில் வெள்ளையர்கள் பலர் ஒன்று கூடி அமர்ந்து இந்திய வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் இந்தியர்களை போலவே முழங்கினர்.
இந்நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில், "வெள்ளை மாளிகையில் இது நடைபெற்றது., அமெரிக்கர்கள் இவ்வளவு சிறப்பாக சமஸ்கிருத வேத மந்திரங்களை உச்சரிக்கின்றனர் என்பது கற்பனை செய்யவே முடியவில்லை" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இது என்று நடந்தது என்கிற தேதி குறிப்பிடப்படாமல் வீடியோ பரவியது.
ஆய்வில் இது உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.
யூடியூப் மற்றும் பேஸ்புக் எனப்படும் இணையவழி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 2018ல் பதிவிடப்பட்டிருப்பதும், அதில் காணப்படும் நிகழ்வு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்த ஒரு இந்து மத வைதீக சம்பவத்தில் வெள்ளையர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள இந்து மத வேதங்கள் ஓதும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் "வேத யூனியன்" எனும் இந்து மத அமைப்பு, 2018 மார்ச் 3-லிருந்து 4 வரை ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்வில் வெள்ளையர்களும் பங்கு பெற்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று தவறுதலாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெயருடன் பரவியிருக்கிறது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது
- பாகிஸ்தானில் அவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக அறிகுறி இல்லை
ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் பாகிஸ்தான் சென்று அகதிகளாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் பார்க்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''பாதுகாப்பான இடத்தை தேடும் பல ஆப்கானிஸ்தானியர்களுக்கு, பாகிஸ்தான் வழங்கிய நம்பமுடியாத வகையிலான மனப்பான்மைக்கு நன்றியுள்ளவராக இருக்கிறோம். பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சவால்களில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.
பயங்கரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான திறனில் தீவிரமாக அக்கறை செலுத்த இருக்கிறோம் என்பதை அதிபர் ஜோ பைடன் தெளிவாக தெரிவித்துள்ளார்'' என்றார்.
- போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க மாற்றி தகவல் வெளியிடும் என டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
- கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு வந்து கண்டெடுத்த பொருள் குறித்து சோதனை நடத்தினர்.
இது குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில், "இவை தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து டிரம்ப், தனது "டிரூத் சோஷியல்" சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க அதிபரின் பிரத்யேக அலுவலகமான ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகைன், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்காக இல்லாமல் வேறு யாருக்கோ என எவ்வாறு நம்புவது? ஆனால், போலி செய்தி ஊடகங்கள் இச்செய்தியை மறைக்க, 'கிடைத்தது மிக குறைந்த அளவு' என்றோ அல்லது 'அது கோகைன் அல்ல, ஆஸ்பிரின்' என்றோ கூறத் தொடங்கி விடும். என்னை வெறுக்கும் அரசு வக்கீல் ஜாக் ஸ்மித், கோகைன் கண்டெடுத்த பகுதியில் காணப்பட்டாரா?" என பதிவிட்டுள்ளார்.
கோகைன் கண்டுபிடிக்கப்பட்டபோது பைடன் வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க அதிபருக்கான தங்குமிடத்தில் இருந்தார்.
ஊடகவியலாளர்களுடன் உரையாடிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர், "அமெரிக்க அதிபர் இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும் என நினைக்கிறார். இப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் (வெஸ்ட் விங்), பெரிதும் மக்கள் பயணிக்கும் பகுதி. அங்கு பல வெள்ளை மாளிகை பார்வையாளர்கள் வருகிறார்கள். இது குறித்து இதற்கு மேல் பகிர்ந்து கொள்ள என்னிடம் எதுவும் தகவல் இல்லை. விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் குறித்த உண்மைகளை அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள் என வெள்ளை மாளிகை நம்புகிறது" என தெரிவித்தார்.
- வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு வெள்ளை பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோபை டன் வெள்ளை மாளிகையில் இல்லை.
வெள்ளை மாளிகைக்கு உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது. பின்னர் மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகைன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார்.
- இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலகட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் டொனால்டு டிரம்ப் ஆஜரானார். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
- டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
புளோரிடா:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.
2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், "அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் அஜராகும்படி டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் டிரம்ப் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் கோர்ட்டில் ஆஜராவதற்கு நேற்று இரவு புளோரிடாவுக்கு டிரம்ப் வந்தார். தனி விமானத்தில் அங்கு வந்த அவர் இன்று மியாமி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் கொடுக்க உள்ளார். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப், கோர்ட்டில் ஆஜராவதால் அவரது ஆதரவாளர்கள் மியாமியில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, "என் மீதான குற்றப்பத்திரிகை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்தாது" என்றார்.
+2
- அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
- வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் நேற்று பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளி நாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
- டிரம்ப் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
- புளோரிடாவில் உள்ள டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் தோல்வியடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து சென்றபோது, முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசாங்க ரகசிய ஆவணங்களை கையாளுவதில் தவறிழைத்ததாக தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளம் மூலமாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஏற்கனெவே ஒரு முறை அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்காக போட்டியிடவிருக்கிறார். இதற்காக மும்முரமாக தம்மை டிரம்ப் தயார் செய்து வரும் வேளையில், அவர் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்படவில்லையென்றாலும், டிரம்பின் வழக்கறிஞர்களிடம், அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் விசாரணைக்கான நீண்ட நெடிய வரலாற்றில், ஒரு முன்னாள் அதிபராக பதவி வகித்தவரும், இரண்டாம் முறை குடியரசு கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராகவும் கருதப்படுபவருமான ஒருவர் மீது நீண்ட கால சிறை தண்டனைக்கு வழிவகுக்கக்கூடிய குற்ற விசாரணை நடைபெறப்போவது இதுதான் முதன்முறை.
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், செவ்வாய்க்கிழமை தாம் நீதிமன்றம் செல்ல வேண்டியிருப்பதாக கூறினார். பிறகு 20 நிமிடங்களிலேயே, 2024 அதிபர் தேர்தலுக்கான தமது பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "நான் ஒரு அப்பாவி" என்றும், அரசியல் காரணங்களுக்காக வேட்டையாடப்படுவதாகவும் கூறினார்.
இப்பொழுது பதிவாகியுள்ள வழக்குடன் டிரம்ப் மீது ஏற்கனெவே நியூயார்க், வாஷிங்டன், மற்றும் அட்லாண்டா ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகளும் சேர்ந்துகொள்வதால், அவர் ஒரு மிகப்பெரிய நீதி விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
டிரம்ப், பாம் பீச் எனப்படும் இடத்தில் உள்ள தனது மிகப்பெரிய "மார்-அ-லாகோ" வீட்டில், அரசாங்க ரகசியங்களாக கருதப்பட வேண்டிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவற்றை மீட்பதற்கான முயற்சிகளையும் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இதுதொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் விசாரித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் டிரம்ப் தனது வீட்டில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், அவற்றில் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கைப்பற்றியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.