என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nobel Prize"
- மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளை தொடர்ந்து பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு.
- வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஸ்டாக்ஹோம்:
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார்.
- 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.
ஸ்டாக்ஹோம்:
2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.
- மருத்துவம், இயற்பியல் துறைகளை தொடர்ந்து வேதியியல் துறைக்கு நோபல் பரிசு.
- மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல் மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
- குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.
- பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது
தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்க விஞ்ஞானி ஜான் எஃப். கிளாசர் மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஜீலிங்கர் ஆகியோர் நடப்பாண்டிற்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் குறித்து ஆய்வு செய்தார் ஸ்வான்டே பாபோ
- மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு
2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வான்டே பாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாம வளர்ச்சியில் மரபணு குறித்த ஆய்வுக்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டேவிட் டிரிம்பிள் வழங்கப்பட்டது.
- அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என போற்றப்படுபவர்.
லண்டன்:
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல் மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார் (77). அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று உறுதிபடுத்தியுள்ளனர் என டிரிம்பிளின் அல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
டேவிட் டிரிம்பிளின் முயற்சியால் 1998-ம் ஆண்டு பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேறியது. மேலும், அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என்று போற்றப்படுபவர் ஆவார்.
பெல்பாஸ்ட் பகுதிகளில் 30 ஆண்டாக நீடித்து வந்த செக்டேரியன் வன்முறையில் சுமார் 3,600 பேர் பலியானார்கள். அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்த டேவிட் டிரிம்பிள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவருக்கு 1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி முரடோவுக்கு வழங்கப்பட்டது.
- உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை விற்க டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரினால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.
இதற்கிடையே, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுத்தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் வழங்கியுள்ளார்.
இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதகுலத்துக்கு உதவும் வகையில் பரிணாம வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் கண்டுபிடிப்புக்களுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. #NobelPrize #NobelPrizeForChemistry
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்துக்கு உதவும் வகையில் பரிணாம வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் கண்டுபிடிப்புக்களுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. #NobelPrize #NobelPrizeForChemistry