என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaza ceasefire"

    • காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாக மாற்றுகிறது.
    • காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

    அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.

    காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

    மேலும், 2023-24 ஆம் ஆண்டில் காசாவின் பொருளாதாரம் 87% சுருங்கியது என்றும், காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 161 டாலர் ஆக இருந்தது என்றும், இது உலகளவில் மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியுள்ளது.

    பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 44 நாட்களில் 500 க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

    • போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது

    காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மத்யஸ்தத்தில் கடந்த 5 வாரங்களுக்கு முன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காசா நகர் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய விமானப்படை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டைத் தாக்கத் தயாராகி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

    டிரம்ப்பின் அமைதி திட்டம் மூலம் சர்வதேச படைகளை காசாவுக்கு அனுப்புவது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
    • காசா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் காசா மீது போர் நிறுத்தத்தை மீறி தொடந்து தாக்குதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில் காசா மீது நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 46 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த வெறியாட்டத்தின் பின்னர் காசாவில் இன்று முதல் மீண்டும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    ராஃபா பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வஞ்சம் தீர்க்க இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

    இஸ்ரேலின் ராணுவ வீரர் கொல்லப்பட்டதால், காசா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    ஆனால், ஹமாஸ் இந்த சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.  

     

    • மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
    • ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.

    காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைதியை உறுதி செய்ய சர்வதேச படை உருவாக்கப்பட்டு காசாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில், எகிப்தில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். இதன்போது இதற்கான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சுமார் 20,000 வீரர்களை காசாவிற்கு அனுப்பும். காசாவில் பாதுகாப்பைக் கண்காணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்பது இந்தப் படைகளின் பொறுப்பாகும்.

    மேலும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த படையில் இடம்பெறுவதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து பாகிஸ்தானுக்கு பெரும் நிதி ஊக்கத்தொகையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

    • அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார்.
    • அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும்

    காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன பொதுமக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னின்று ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில், "ஹமாஸ் காசாவில் மக்களைக் கொல்வதைத் தொடர்ந்தால், அது ஒப்பந்தத்திற்கு எதிரானது, அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று எச்சரித்தார்.

    எனினும், காசாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்பப் போவதில்லை என்றும், அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். காசவில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் உடன் ஹமாஸ் மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில்  68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காசா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.

    இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

    தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக காசா சிவில் பாதுகாப்புப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.

    இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.  

    • அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.
    • இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

    காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று உலக தலைவர்கள் எகிப்தில் கூடினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து இணைந்து தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி துருக்கி அதிபர்  எர்டோகான் கிண்டலாகப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    மாநாட்டில் மெலோனியிடம் பேசிய எர்டோகான், "நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது பார்த்தேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் கையில் உள்ள சிகரெட் இருந்தது. இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

    எர்டோகானின் பேச்சைக் கேட்ட அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.

    இதற்கு மெலோனியும் அதேபோல வேடிக்கையாகப் பதிலளித்தார். அதாவது, "எனக்குத் தெரியும். ஆனால், நான் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், எனக்கு எரிச்சல் அதிகமாகி, யாரையாவது ஏதாவது சொல்லிவிடுவேனோ!" என்று அஞ்சுவதாக கூறி சிரித்தார். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    துருக்கியை புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் எர்டோகான் அடிக்கடி கூறி வருகிறார்.

    மறுபுறம், வெளிநாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள தனது புகைப்பழக்கம் உதவியதாக மெலோனி முன்பு ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
    • சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும்.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் பணய கைதிகள் 20 பேரை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி உட்பட நான்கு பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

    பிபின் ஜோஷியின் சடலம் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல் அவிவ் விமான நிலையத்தை அடைந்தது என்று இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ஜோஷியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு (DNA) பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகு, நேபாள தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்று தூதர் பண்டிட் கூறினார்.

    அக்டோபர் 7 , 2023, இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

    ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ், காசா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்து ஆராய்ச்சி படிப்புக்காக சென்ற 17 நேபாள மாணவர்களில் ஜோஷியும் ஒருவர் ஆவார்.

    ஹமாஸ் தாக்குதல் நடந்த நாளில், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் சைரன் ஒலித்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெடிபொருள் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்தில் பதுங்கினர்.

    ஆனால், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்குள் ஹமாஸ் போராளிகள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் பலர் காயமடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிபின் ஜோஷி, இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் லாவகமாகப் பிடித்து, மீண்டும் வெளியே வீசினார்.

    ஜோஷியின் இந்தத் துரிதச் செயலால் அங்கிருந்த பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஜோஷியை ஹமாஸ் படையினர் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக்கைதிகளில் கஸாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்ட ஒரே நபர் இவர்தான்.

    2023 இல் கடத்தப்பட்டதில் இருந்து ஜோஷியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் கஸாவில் இருந்து ஜோஷி உயிருடன் இருந்ததைக் காட்டும் ஒரு வீடியோவை மீட்டது. இருப்பினும் அவர் தற்போது சடலமாக திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.   

    • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என டிரம்ப் கேட்டார்.
    • இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார்

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்" என கூறிவிட்டு, பின்புறம் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என கேட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்" என்று தெரிவித்தார்.

    • நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?
    • டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய டிரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.

    மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    • அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டினார்.
    • டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார். காஸாவில் தற்போது அமைதியை கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டும்போது இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது.
    • ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது.

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய டிரம்ப், பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் இப்போது தாராளமாகப் கிடைத்து வருகின்றன.

    நூற்றுக்கணக்கான லாரிகளில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குச் செல்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைகிறார்கள். ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது. மறுநிர்மாண செயல்முறை இப்போது தொடங்கும்

    இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த நிலையை அடைய நீண்ட காலம் ஆனது. நாங்கள் மிகவும் விரிவாக ஆய்வுப்பின் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திடுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

    மேலும் இந்த இதை சாத்தியமாக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய எகிப்து மற்றும் கத்தார் அரசாங்கங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

     இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதில் பங்கேற்றார். 

    ×