என் மலர்
நீங்கள் தேடியது "காசா"
- பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.
காசா அமைதி வாரியத்தின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார்.
பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் வாஷிங்டனில் பிப்ரவரி 19 அன்று நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவின் மறுசீரமைப்பு, போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு குறித்து இதில் விவாதிக்கப்படும்.
கடந்த மாதம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக இந்த வாரியத்தில் இணைந்தது.
இதற்கிடையே கசாவை மேற்பார்வையிட டிரம்ப் தலைமையில் ஒரு வாரியம் அமைக்கப்படுவது, நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ஷெபாஸ் ஷெரீப் அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மேற்குக்கரையில் யூதக் குடிமக்கள் நிலம் வாங்குவதற்குப் இருந்த தடையை இஸ்ரேல் நீக்க உள்ளது.
- மதத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இஸ்ரேலிய அதிகாரிகள் பெறுவர்.
பாலஸ்தீன நாட்டின் முக்கியப் பகுதியான மேற்கு கரை 1967 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி தங்களுக்கே சொந்தம் என இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி வருகிறது.
அங்கு பூர்வீமாக உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நோக்கில் இஸ்ரேல் மக்களின் திட்டமிட்ட குடியேற்றம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மேலும் விரிவுபடுத்த இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மேற்குக்கரையில் யூதக் குடிமக்கள் நிலம் வாங்குவதற்குப் இருந்த தடையை இஸ்ரேல் நீக்க உள்ளது.
இதுவரை யூதக் குடியேற்றவாசிகள் கட்டுமானங்களுக்கு உள்ளூர் நகராட்சி மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆகிய இருவரிடமும் அனுமதி பெற வேண்டியிருந்தது. இனி இஸ்ரேலிய அதிகாரிகளிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதுமானது.
பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் சில மதத் தலங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் இஸ்ரேலிய அதிகாரிகள் பெறுவர்.
இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த நடவடிக்கை இஸ்ரேலிய மண்ணில் எங்களது வேர்களை ஆழமாக்கும் மற்றும் பாலஸ்தீன நாடு என்ற கருத்தாக்கத்தைப் சிதைக்கும். மேற்குக்கரை நாட்டின் இதயம் போன்றது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது மேற்குக்கரையை இஸ்ரேலுடன் முழுமையாக இணைத்துக்கொள்ளும் முயற்சி என பாலஸ்தீன நிர்வாகம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பல சர்வதேச அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெறிவித்துள்ளன.
- காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.
- காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
காசாவில் கடந்த அக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.
காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, காவல் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.
காசா நகரில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்த எல்லை திறக்கப்படுவது. சிகிச்சைக்குக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு இது ஒரு முக்கியமாக நிகழ்வாகும்.
அக்டோபர் 10-ஆம் தேதி போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 509 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஹமாஸ்க்கு எதிரான போரினால் கடந்த 2024-ல் இருந்து எல்லை மூடப்பட்டது.
- ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்தவரின் உடல் பாகம் கிடைத்ததும், இஸ்ரேல் எல்லையை திறக்கிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரினால் கடந்த 2024-ம் ஆண்டு எகிப்து உடனான காசாவின் முக்கிய எல்லையை இஸ்ரேல் மூடியது. இந்த நிலையில் நாளை முதல் இந்த எல்லை (Rafah) திறக்கப்படும் என காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள இஸ்ரேலிய இராணுவ அமைப்பு {கோகாட் (COGAT)} தெரிவித்துள்ளது.
ஆனால் மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படுவது டிரம்பின் காசாவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் காவல்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் இந்த எல்லைப் பகுதியாக வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை இஸ்ரேலும் எகிப்தும் சரிபார்க்கும்.
காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அனுமதி பெற்று மீண்டும் காசா திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
- காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த கடைசி பிணைக்கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது திங்கள்கிழமை, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடல் ரான் க்விலி என்பவருடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும் இப்போது தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம்இஸ்ரேல் உடன் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது உயிருடன் மீதமிருந்த பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது,
- காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
- இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை. டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
- காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
- இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
டாவோஸ்:
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளனர்.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்து விட்டது.
- காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
- உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
- போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் கடந்த அக்டோபர் 10 போர் நிறுத்தம் ஏற்பட்ட போதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும் உதவிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் மக்கள் சொற்ப நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கும் அலைமோதி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 3 பத்திரிகையாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள் சென்ற அந்த வாகனம் டிரோன்களைப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
அக்டோபர் 10 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவை நிர்வகிக்க டிரம்ப் உருவாக்கிய 'அமைதி'க் குழுவில் இஸ்ரேல் இணைத்துள்ளது.
- அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
- இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.
ஜெருசலேம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.
இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இக்குழுவில் இணையும் 8-வது நாடு இஸ்ரேல் ஆகும். இந்த வாரியத்தில் பிரதமர் நேதன்யாகு இணைய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அவரது அலுவலகம் நேற்று அறிவித்தது.
டிரம்பின் இந்த வாரியத்தில் அமீரகம், மொராக்கோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இணைய ஒப்புதல் தெரிவித்தன.
- காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது இந்த குழுவின் நோக்கம்.
- மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இக்குழுவில் இணையும் முதல் அரபு நாடு என்ற அந்தஸ்தை அமீரகம் பெற்றுள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.
இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில் அமீரகத்தின் இந்த முடிவைத் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
இது மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும், மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார்.
- ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது
- காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது இதன் நோக்கம்.
போர் நிறுத்தத்தின் பின் காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க காசா அமைதிக் குழுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்.
இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக இணையுமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது.
இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினை காசா அமைதிக் குழுவில் இணையுமாறு டிரம்ப் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார்.






