என் மலர்
நீங்கள் தேடியது "Peace Talk"
- அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.
- பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் 'தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' என்ற அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்தனர்.
பதிலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்காளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கத்தார் மத்யஸ்தத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
தொடர்ந்து துருக்கியில் பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்றும், ஆப்கான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் எனவும் ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா சென்றார்.
- அவரை வெள்ளை மாளிகை வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இதில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப், நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். இதற்கு நேதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது
காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்ட ட்ரூத் சோசியல் பக்கத்தில் கூறியதாவது:
ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.
- கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர்:
உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் அங்காடிகளில் கோதுமை வழங்கப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டி உடன் கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி தலைமையில் காங்கிரசா ருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஹிர் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், வரும் மாதங்களில் மக்களுக்கு தேவையான அளவு கோது மைகளை வழங்கு வதாக வட்ட வழங்கல் அலுவலர் உறுதியளித்தார்.
கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும்அதனை ஏற்று ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் ஒத்தி வைத்தனர்.
இந்த சமரச கூட்டத்தில் காங்கிரஸ் இலக்கிய அணி மாவட்ட தலைவர் தங்கராஜன், பஞ்சாயத்ராஜ் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆனந்த் ரெட்டி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சயீத் முபாரக் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
- சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து திருமுலைவாசல் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து சாலையில் அதிக அளவு உள்ள பள்ளங்களால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனர்.
சீர்காழி -திருமுலைவாசல் செல்லும் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பங்கேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் சீர்காழி ஈசானியத்திலிருந்து திருமுலைவாசல் வரை செல்லும் சாலையை சீரமைப்பது எனவும் மாதானம் கூட்டு ரோடு அருகே தேவையான இடங்களில் வேக தடை அமைப்பது எனவும் உறுதியளித்தனர் இதனை அடுத்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.






