என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு கரை"

    • அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.
    • அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

    இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் நிராயுதபாணியான இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ மத்திய கிழக்கு ஊடங்களில் வெளியிடப்பட்டது.

    அந்த வீடியோவில், இஸ்ரேல் ராணுவம் ஒரு கேரேஜை புல்டோசரால் இடித்துக் கொண்டிருந்தது. அப்போது உள்ளிருந்து 2 ஆண்கள் கைகளை தூக்கியபடி வெளியே வந்தனர்.

    தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை காட்ட அவர்கள் அவ்வாறு செய்தனர். அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.

    அப்போது மற்றொரு வீரர் அவர்களை சுட்டுக் கொன்றார். அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

    நிராயுதபாண்டியாக வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றது போர் குற்றம் ஆகும்.

    இஸ்ரேலிய இராணுவம் இறந்தவர்களை தேடப்படும் போராளிகள் என்று விவரித்துள்ளது. அவர்கள் வீரர்கள் மீது வெடிபொருட்களை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் ராணுவம் கூறியது.

    இந்த செயலுக்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் ராணுவத்தைப் பாராட்டினார். பயங்கரவாதிகள் இறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    இது சர்வதேச சட்டத்தை மீறி செய்யப்பட்ட கொலை என்பதை பாலஸ்தீன பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    • கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
    • இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.

    குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

     தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.

    மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

    மேற்கு கரை ஆக்கிரமிப்பு:

    இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.

    அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.

    இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.

    மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

    அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.

    அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    • மேற்கு கரையின் முக்கிய சந்திப்பில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இந்த பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை சந்திப்பில் வாகத்தை மறித்து, அதில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியதில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் அவசர மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெருசலேமின் தெற்குப் பதியில் பரபரப்பாக இயங்கும் சந்திப்பில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இங்கு இஸ்ரேலியர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    வாகனத்தில் சென்றவர்கள் மீது 3 பயங்கரவாதிகள் தாக்குதால் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

    • இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
    • நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது

    இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

    இதற்கிடையே பாலஸ்தீனம் என்று ஒரு நாடு கிடையாது என்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்நிலையில் மேற்கு கரையை இஸ்ரேல் இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இதுவரை நடந்ததுபோதும். இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டிரம்ப் -இன் கருத்து வந்துள்ளது. 

    • இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
    • மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும்.

    இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நேதன்யாகு கையெழுத்திட்டார். மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.

    இதன் பின் பேசிய நேதன்யாகு, "எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்" என்று கூறினார்.

    இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

    மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.

    சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும்.

    தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர். 

    • பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது.

    இஸ்ரேலின் ஜெருசலேமில் மரம் நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பில் காலை 10 மணியளவில் காரில் துப்பாக்கிகளுடன் வந்த இருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு காவலர் திருப்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே குண்டடிபட்டு போதும்மாக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்தனர் . அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

    தாக்குதல் நடத்தியவர்கள் மேற்குக் கரையிலிருந்து வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

    • "எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
    • மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

    பாலஸ்தீன ஆர்வலரும் ஆசிரியருமான அவுடா ஹாதெலின், ஆஸ்கார் விருது பெற்ற "நோ அதர் லேண்ட்" திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர் ஆவார்.

    இந்நிலையில் அவுடா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரான் மலைகளுக்கு அருகிலுள்ள உம் அல்-கைர் கிராமத்தில் திங்கள்கிழமை, இஸ்ரேலிய குடியேற்றக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    "எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.  

    ஹதலினின் கொலை ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கரையில் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியர்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அக்டோபர் 2023 இல் இருந்து, கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேலுடன் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது.

    காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று நடந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

    கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர். காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில், 14 அமைச்சர்கள், ஜூலை 27 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்க்கு மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளிடம் இருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

    • 1967ஆம் ஆண்டு போரின்போது மேற்குக் கரையை கைப்பற்றியது.
    • யூத மக்களுக்கான மேற்குக் கரையில் இஸ்ரேல் 100-க்கும் அதிகமான குடியிறுப்புகளை நிறுவியுள்ளது.

    ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் யூதர்களுக்காக 22 புதிய குடியிறுப்புகளை நிறுவ இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. அரசு அனுமதியின்றி ஏற்கனவே கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கவும் முடிவு செய்துள்ளது.

    1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது இஸ்ரேல், காசா முனையுடன் மேற்குக் கரையை கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதியையும் கைப்பற்றியது. இந்த மூன்று பிராந்தியங்களையும் தங்களுடைய எதிர்கால நாட்டிற்கான மாநிலங்களாக பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள்.

    இஸ்ரேல் நிலத்தில் எங்களது வரலாற்று உரிமையை வலுவாக நிலைநிறுத்தவும், பயங்கரவாதத்தை நொறுக்கும் பதிலடியாகவும் இந்த குடியிறுப்பு முடிவுகள் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் "இஸ்ரேலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதைத் தடுக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே மேற்கு கரையில் இஸ்ரேல் 100-க்கும் மேற்பட்ட குடியிறுப்புகளை கட்டியுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். ஷாப்பிங் மால், தொழிற்சாலைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த குடியிறுப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    மேற்குக் கரையில் 3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இஸ்ரேலிய ராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மேற்கத்திய ஆதரவு பெற்ற பாலஸ்தீன ஆணையம் மக்கள் தொகை மையங்களை நிர்வகிக்கிறது. குடியேறியவர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமை உள்ளது.

    • ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.
    • பின்னர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

    'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இஸ்ரேல் ராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.

    இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள் (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

    • இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
    • இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

    நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

    இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

    • ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்
    • போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றுள்ளது

    ஆக்கிரமிப்பு வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜெனின் அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் டிரோன்கள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலியர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை'' என்றார்.

    பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம், மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம்அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட இரண்டு குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன. ஆனால், சண்டை குறித்து முழு விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது.

    முன்னதாக, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியதால் 25 வயது பாலஸ்தீனர், காசா முனையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேல் குண்டுக்கு பலியானார்.

    மேற்கு கரையில் அடிக்கடி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், ஒன்றரை வருடங்களாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடந்த சமீபத்திய வன்முறை இதுவாகும்.

    ×