என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west bank refugee camp"

    • கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
    • இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பிட்ட மேற்குக் கரையில் உள்ள முக்கிய வரலாற்றுத் தலத்தின் பகுதிகளை இஸ்ரேல் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலின் சிவில் நிர்வாகம், மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய தொல்லியல் தளமான செபாஸ்டியாவின் பெரும் பகுதிகளை கையகப்படுயத்தும் உத்தரவை கடந்த நவம்பர் 12 வெளியிட்டது.

    குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்புக் அமைப்பான Peace Now கூற்றுப்படி, இந்தத் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தளம் சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஒலிவ மரங்கள் உள்ளன. இது பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என பீஸ் நவ் தெரிவித்துள்ளது.

     தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    செபாஸ்டியா இடிபாடுகளுக்கு அடியில் பண்டைய இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகரான சமாரியா இருந்ததாகக் கருதப்படுகிறது.

    மேலும் இது, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களால் ஜான் பாப்டிஸ்ட் கல்லறை இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.

    இஸ்ரேல் இந்த தளத்தை ஒரு சுற்றுலா மையமாக மேம்படுத்த 2023-ல் அறிவித்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 9.24 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.

    மேற்கு கரை ஆக்கிரமிப்பு:

    இஸ்ரேல் 1967 போரில் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா ஆகியவற்றை ஆக்கிரமித்தது.

    அது முதல், மேற்குக் கரையில் 500,000-க்கும் மேற்பட்ட யூதர்களை அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களில் குடியேற்றியுள்ளது. கிழக்கு ஜெருசலேமில் 200,000-க்கும் மேற்பட்ட யூதர்கள் குடியேறியுள்ளனர்.

    இதற்கிடையே அண்மையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பெத்லஹேமுக்கு அருகில் ஒரு புதிய, அங்கீகரிக்கப்படாத குடியேற்றப் புறக்காவல் நிலையத்தை அமைத்துள்ளனர்.

    மேலும் அங்கு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

    அண்மையில் மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் வன்முறையை ஆவணப்படுத்திய பாலஸ்தீனிய ஆர்வலர் ஐமன் கிரையேப் ஓடே கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறையை தூண்டியதாக அவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர் விசாரணையற்ற காலவரையற்ற தடுக்குக்காவலில் அடைக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த ஆண்டு மேற்குக் கரையில் உள்ள மூன்று அகதிகள் முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் 1967-ல் ஆக்கிரமித்ததில் இருந்து அப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.

    அங்கு 850-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டிடங்களும் அழிக்கப்பட்டதாகவோ அல்லது பலத்த சேதமடைந்ததாகவோ செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    • இஸ்ரேலுடன் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது.

    காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று நடந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

    கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர். காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில், 14 அமைச்சர்கள், ஜூலை 27 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்க்கு மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளிடம் இருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

    • இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
    • இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

    நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.

    இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.

    இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

    இஸ்ரேல் வீரரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை ராணுவத்தினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Israelblowsup #Palestinianhome #WestBank #WestBankrefugeecamp
    ரமல்லா:

    இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வீரர் தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக வெஸ்ட் பேங்க் பகுதியை சேர்ந்த இஸ்லாம் அபு ஹமித் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதியின் தெற்கே அல்-பைரே என்னுமிடத்தில் உள்ள அம்அரிஅகதிகள் குடியிருப்பை நேற்றிரவு ஆயிரக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். அங்கிருந்த சுமார் 400 பேரை கைது செய்தனர்.

    மேலும், அப்பகுதியில் அபு ஹமித் குடும்பத்துக்கு சொந்தமான 4 மாடிகள் கொண்ட வீட்டை வெடி வைத்து, தகர்த்து தரைமட்டமாக்கினர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அங்கிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் தற்போது பாலஸ்தீன செம்பிறை தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, இப்பகுதிக்கு வந்த ராணுவத்தினரை தடுத்து நிறுத்தும் முயற்சியின்போது பாலஸ்தீனியர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த மோதலில் ஒரு பத்திரைகையாளர் உள்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர்.  #Israelblowsup #Palestinianhome #WestBank #WestBankrefugeecamp
    ×